எதிரியும் செய்வான் நகைச்சுவை

களங்களுக்கும் பின் களங்களுக்கும் சாப்பாடு வழங்கும் எங்கள் வழங்கல் பொறுப்பாளர் “அம்மா” என அன்போடு அழைக்கப்பட்டார்!

வீட்டிலே பசித்தால் அம்மாவின் நினைவு வருவதைப் போலவே களத்தில் பசித்தால் “அம்மா” என அன்போடு அழைக்கப்படும் அந்த அதியன்னதமானவரின் நினைவு எமை ஆட்கொள்வதுண்டு.

இளையோர் நாம் எடுத்தற்கு எல்லாம் அவரை கூப்பிட முடியாது என தெரிந்தாலும் இரண்டு வேளையோ மூன்று வேளையோ சாப்பாடு இல்லாமல் “கடும்பசி” எடுக்கும் நேரங்களிலும் அம்மாவையே அழைத்துப் பேச எல்லா களநிலைத் தளபதிகள் விரும்புவதுண்டு.

உணவு பழுதடைந்து வரும் நிலையில் அந்த உணவு பக்ரீரியாக்களினால் நஞ்சூட்டப்படும் (Food Poisoning) அச்சத்தால் மருத்துவ சுகாதாரப் பணி செய்த யாமும் அவருடன் பேசுவதுண்டு.

இப்படித்தான் ஒரு நாள் மதிய நேரம் களத்திற்கு நெடு நேரமாகியும் சாப்பாடு வராத ஒரு நாள்…!

“அம்மா அம்மா” என அலறியது எங்கள் நடைபேசி(Walkie Talkie)!

அதற்கு முந்தைய நாள் “ஐயா அண்ணை ஐயா அண்ணை” எனவும்….

இடை இடையே….

“அக்காச்சி அக்காச்சி” ………………………………………….

அம்மா அம்மா…………

ஓவர் ஓவர்!….

எனவும்!

எங்கள் வானலையின் வெற்றிடம் அன்பால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

 

நாங்கள் நடைபேசி ஊடக கதைத்தை எல்லாம் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக்(Over hearing)கொண்டிருந்த எங்களின் எதிரியானவன்..

எரிச்சல் அடைந்தான்.

ஆம்,

உணர்ச்சி வயப்பட்டு
தனை மறந்துடன்
தனது ஒட்டுக் கேட்டல் தொழிலையும்
மறந்து போனதால்….!

“என்னடா உங்கை குடும்பமா நடத்துகின்றியள்” எனக் கேட்டான்!!!

பசியோடு இருந்த எங்களுக்கு பசி மறந்து
சிரிப்பு வந்தது!

அதே நேரம்,

பச்சைத் தமிழ் கொஞ்சிக் குலாவிடும் எம் மண்ணில் கொச்சைத் தமிழ் பேசும் எதிரி எத்துணை அவதானமாக பணியில் உள்ளான் என்பதும் புரிந்தது!………………….!🤣