மூவின மக்களும் வாழும் கிழக்கிலங்கையின் கிராமம் அது.
காலம் எண்பதுகளின் மதியம்.
கிராம உட்கட்டுமான வேலையொன்றுக்கு மகஜர் தயாரித்தார் கிராமத்தலைவர்.
அரசிடம் அனுப்புவதற்கு முன் எல்லோரும் கையொப்பம் வேண்டும்.
இப்போது ஒவ்வொருவராகக் கையொப்பமிட்டுக் கொண்டு வந்தார்கள்.
சிங்களவர்கள் அழகாக சிங்களத்தில்
கையொப்பம் இட்டார்கள்.
இஸ்லாமியர்கள் சுந்தரத்தமிழில்
கையொப்பம் இட்டார்கள்.
தமிழர்கள் அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டார்கள்.’
சாம்பல்தீவு மண்ணில் அவதரித்து கச்சத்தீவுக் கடலில் காவியமான நண்பர் லெப். கேணல் நீலன்(சிவலிங்கம் சுபாஷ்கரன்) சொன்ன கதை கேட்டீர்கள்.
இது ஓர் இழிநிலைதான் எனினும்…
1990 களுக்கு பின் வந்த காலங்களில் எம் தமிழர்தேசத்தின் ஆன்மாவில் மாற்றம் வந்தது.
மாவீரர் சிந்திய குருதியால் ஓர் மறுமலர்ச்சி கண்டோம். ஆனால் இன்று தளர்ச்சி காண்கிறோம்.
மானமாவீரரை நாம் உளப்பூர்வமாய் நேசிப்பதாயின் தாய்தமிழைக் காத்து அடுத்த தலைமுறையிடம் பத்திரமாகக் கையளிப்போம்.🙏
நன்றி