முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

300

 

ஆண்டொன்று ஆனால் என்ன.

ஆயிரம் தான் கடந்து போனால் என்ன.

ஆலமரம் சரிந்தது விழுதுகள் வளர்ந்த பின்னே.

சூரியன் மறைந்தது எம் மண் விடுதலை பெற முன்னே.

உங்கள் வைத்தியம் தொலைந்தது கரையினை தொடும் முன்னே.

இருள் நடுவினிலே லாம்போடு உங்கள் இல்லம் வாந்தாலும்.

அன்போடு அரவணைத்து வைத்தியம் புரிந்த உத்தமரே.

பணம் என்று வாய்விட்டு கேற்காது, கொடுப்பதை வாங்கும் அன்புருவே.

ஒளிதரும் சூரியனாக இருள் அகற்றும் சந்திரனாக.

ஊர்போற்றும் நல்லவனாக பார் போற்றும் வல்லவனாக.

வாழ்வாங்கு வாழ்ந்து- ஊருக்குள் வைத்தியம் செய்து.

உயிர் காத்த எம்மை வாழவைத்த தெய்வமே.

நாங்கள் கலங்கி நின்றாலும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய.

எங்கள் குலதெய்வங்களை பிரார்த்திக்கின்றோம்.