“மனோ”திடமாணி..

#Mano_Master used to tell us that “Education is our capital forever”.

Mano master promoted learning and teaching activities to the public and freedom fighters. He has read and pondered over English books and has drawn up modern military science curriculum to suit our climate.

He designed the Engineering college in Jaffna for our caders.

👑👑பல்துறைகளில் வித்தகர்களாக மிளிர்ந்த பல போராளிகளை செதுக்கிய சிற்பி மனோமாஸ்டர்! ஒரு நல்ல வீரனில் பண்பும் அடக்கமும் நிறையவே இருக்கும் என்று “சாண்டிலியனும், கல்கியும்”எழுதிய பொத்தகங்களில் படித்திருக்கிறேன். அதை மனோமாஸ்ரிட(மு)ம் பார்த்திருக்கிறேன்!!

கல்வியும் எங்கள் மூலதனம்…” என்பதை சிந்தையில் கொண்டு கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை பொதுமக்களிடமும் போராளிகளிடமும் ஊக்குவித்தவர். ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் அதிகம் வாசித்து யோசித்து யோசித்து எங்களது பூகோள அமைப்பு, காலநிலை, தட்பவெட்பம் போன்றவருக்கு ஏற்ப நவீன படைத்துறைப் பாடத்திட்டங்களை வரைந்தவர்.

சாதாரண போராளிகளுக்கும் இலகுவில் விளங்கக் கூடிய முறையில் அவர்களுக்கு பக்குவமாக படைத்துறை அறிவூட்டி வந்தார்.

அம்பு வில்லுடனும் 🏹 ,வாளுடனும் இருந்த தமிழர்தம் படைத்துறை அறிவைப் பெருக்குவதற்கு தலைவரின் தலைமையில் தமிழினம் எடுத்த முயற்சிகளையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாது. 🏹 அந்த முயற்சிகளுக்கு காத்திரமான பங்களிப்பை நல்கிய எங்களின் ஆசான்!

காடுகளில் போராளிகள் கஞ்சி குடித்து வாழ்ந்த காலங்களிலும் அவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் முன்னின்று வழிகாட்டிய திறமையான வழிகாட்டியும் ஆவர்!🌳🌳🌳🌳🌳மனோமாஸ்டர் எனும் பெருவிருட்ஷத்தின் விழுதுகள் இன்றும் எம்மண்ணில் உள்ள கல்விச்சாலைகளிலும் பட்டி தொட்டிகளிலும் கல்விப்பணி செய்தே வருகிறார்கள்.

📚அந்தப் பெருவிருட்ஷத்தின் பெருவிழுதுகள் பாரெங்கும் பரவி அவரின் பெரும் பண்புகளைத் தாங்கி எங்களுடன் வாழ்ந்து வருவதால் பெருமையுறுகிறேன்!🌞அவர் எம்முடன் வாழ்ந்து வருவதாகவே நினைந்து கொள்கிறேன்!❤🙏