அலைகள் அதிகம் அதிகமாக இருந்த சுண்டிக்குளம் பெருங்கடலில் படகேறி நடுநிசியில் குடாரப்பில் தரையிறங்கி கடல்நிரேரியைக் கடந்து 24 மணி நேரத்துக்குள் தலைவர் சொன்ன பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனையை சமர்களநாயகன் மீறினார்.
தலைவர் சொன்ன ஆலோசனையை சமர்களனையகன் மீறிய அல்லது விதிவிலக்கான சம்பவமும் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
ஆம், தனக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட அந்த இரண்டு களமருத்துவர்களையும் வேறு ஓர் இடத்துக்கு அனுப்பினார். அங்கு சமர் புரியும் எல்லா போராளிகளுக்காகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவ நிலையத்துக்கு அவ்விரு களமருத்துவர்களையும் அனுப்பிவைத்தார்.
எழுதுமட்டுவாள் பெட்டிச் சமரில் தனது நலனை விட தனக்கு கீழே செயற்படும் சிறப்பு எல்லைப்படை வீரர்களை யும், சாதாரண போராளிகளையும், அணித்தலைவர்களையும், இளநிலைத் தளபதிகளையும் சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அதிகம் நேசித்தார்.
தன்னை நேசிக்காமல் தனது நோயைக்கூட கவனிக்காமல் மக்களையும் தலைவனையும் நேசித்த பெருந்தளபதியை இந்தியப்படைகளால் அல்லது வல்லரசுகள் எல்லோரிடமும் பயிற்சி பெற்ற இலங்கைப் படைகளால் வெல்ல முடியாமல் போனது ஆனால் பெரும் படைகளால் முடியாத காரியத்தை பின்னாளில் (20/05/2008) நோய் சாதித்தது.
“TAKING CARE OF THE WOUNDED IN BATTLE IS A KEY ELEMENT!”