எம் தலைவா அன்புத் தலைவா
தமிழ் இனம் கண்ட தெய்வமையா நீங்கள்
கலியுக தெய்வமாய் உனைக்கண்டார் எம் மக்கள்
அயலவர்கள் அன்புடன் தம்பியென அழைக்க
உன்மக்கள் பாசத்துடன் தலைவர் என அழைக்க
சிந்தையில் தமிழ் இனத்தையும்’
செயலில் வீரத்தையும்’ வெளிக்காட்டினாய்
எத்திக்கும் வெற்றி வாகை சூடி
பகைவரை கலங்கடித்தாய்
கலியுகத்தில் தமிழ் இனம் காக்க
முப்படை கட்டினாய்
உன் வீரம் பகைவரையும் கவர்ந்தது
கயவர் சூழ்ச்சிவலை விரித்த போதெல்லாம்
என் கொள்கை தமிழ் இன விடுதலையே என பறைசாற்றினாய்
உனைவெல்ல தரணியில்
படையொன்று இல்லையென்பதை உணர்ந்த கயவர்
உன் கண்ணை குத்த உன் விரல்களில்
ஒரு எடடப்பனை நாடி
உனை தோற்கடிக்க முயல
என் இன விடுதலையே மேன்மை என எண்ணி
ஆயுதங்கள் மௌனித்தாய்.
தமிழ் இனம் காக்க உன் குடி இழந்தாய்
காலத்தின் சூழ்ச்சியால்
சூரியனை நோக்கி நாய் குறைப்பது போல்
சிலர் குறைகின்றனர்
குன்றின் மேலிட்ட விளக்கினைப்போல் உன் புகழ்
தமிழ் இனம் உள்ளவரை இத்தரணியில் பரணி பாடும்
வாழ்க உன் வீரம்’
மலரட்டும் தமிழ்