மே – 08

494

மே – 8.. 

பிரான்சில் பொது விடுமுறை. ஒன்று பட்ட ஐரோப்பா என்று முழங்கியபடி தொடங்கிய ஹிட்லரின் போர் வெறி, ஆபிரிக்கா வழியாக உலகம் முழுக்கப் பாய எத்தனிக்க, பல உலக நாடுகள் ஒன்று பட்டு ஹிட்லரின் படையைப் பணிய வைத்த நாள். ஆம்.. இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்த நாள்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சை மீட்பதற்கு நடந்த  சண்டையில் பிரான்சில் வைத்து கொல்லப்பட்ட ஜேர்மனிய இராணுவத்தினரின் உடலங்களும் புதைக்கப்பட்டி நல்லிணக்க இடுகாடு அமைக்கப்பட்டதும் உண்டு. மே எட்டில் அவ்விடுகாட்டில் சிறப்பு நிகழ்வுகளும் நடந்திருக்கும்.

உலகின் அழகிய தெருவெனும் அடைமொழியுடன், இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்தோரின் நினைவாக ஏற்றப்பட்ட அணையா விளக்கு அமைந்திருக்கும் சோம்பெலிசே தெருவில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இவ்வாறு மே எட்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் இரண்டாம் உலகப் போர் முடிந்தது மே எட்டில் அல்ல. மூட்டி விட்டிட்டு வியாபாயம் செய்துகொண்டிருந்த அமெரிக்காவை சுரண்டி விட்டு சண்டைக்குள் இழுத்து விட்ட அன்றைய சப்பான் பேரரசின் இரு நகர்கள் மீது வீசப்பட்ட அனுகுண்டுடனேயே போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எந்த நோக்கில் அந்த சண்டை தொடங்கியதோ அந்த நோக்கம் இன்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. முழு ஐரோப்பாவையும் கைப்பற்றி ஜேர்மன் பேரரசாக்க முயன்றான் ஹிட்லர். இன்று அதே இலக்கு ஐரோப்பிய ஒன்றியம் என மாற்றப்பட்டு எட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு சமகால உலக நிகழ்வுகள் பலவும் பழைய இலக்குகளை அடைய அமைக்கப்பட்ட புதிய பாதைகளாகத்தான் உள்ளன. இதை எம்மைச் சிந்திக்க விடாது வைத்திருப்பதில் உள்ளது சூட்சுமம்.

இது ஒரு புறம் இருக்க, இம் மே எட்டில் நடந்த வேறு முக்கிய காலச்சுவடுகளை கொஞ்சம் தடவிப் பார்க்கலாம். 

1480 இங்கிலாந்தின் கெண்ட் நகரில் ஜேக்கேட் தலைமையில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது.

பிரென்சு இரசாயனவியலாளர் ஒந்துவான் இலவாசியே 1794  மே எட்டில் தேசத்துரோகச்சாட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

1886 மே எட்டில் கொக்கக்கோலா அறிமுகம் செய்யப்பட்டது.

1914 இல் மிகப்பெரிய ஹொலிவூட் தயாரிப்பு நிறுவனமான ஃபரமவுண்ட் பிக்சர்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

1978 இல் இயல்பான முறையில், அதாவது எந்தவிதமான சுவாச உதவிக் கருவிகளும் இன்றி எவரெஸ்ட் சிகரம் தொடப்பட்டது.