செம்மண்ணுடன் செந்தமிழும் உயர் ஈகமும் ஓங்கிச் செழித்த வயவை மண்ணில் அவதரித்த மானமாவீரர்

ஆண்டாண்டு காலமதாய் நாம்
ஆண்டு வந்த பூமி தமிழீழம்.

1500 களில் இறையாண்மை இழந்தோம்.
போர்த்துக்கேயன்,ஒல்லாந்தன், வெள்ளையன் கால்களில் வீழ்ந்தது.

1940களில் விடுதலை அடைந்தோம் என நிமிர முனைந்த போது எட்டி உதைந்தனர் சிங்கள இனவெறியர்.

அவன் கால்களையும் கட்டிப்பிடித்து அழுத போது அர்த்தமுள்ள பாதைதனைத் தேடித்தந்தார் ஒரு பெருமகனார்.

விடுதலைக்கான அர்த்தமுள்ள போராட்டப்பாதையில் தமிழர் வீறு நடைபோட்டனர்.

கரடு முரடான விடுதலை நோக்கிய பாதைதனை வார்த்தைகளால் வடிக்கமுடியாத ஈகங்களால் வலுப்படுத்தினர் பல மானத்தமிழர்கள்.

அவர்களில் தம் இன்னுயிர் ஈந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!

செம்மண்ணுடன் செந்தமிழும் உயர் ஈகமும் ஓங்கிச் செழித்த வயாவிளான் மண்ணில் அவதரித்த மானமாவீரரில் லெப்_கவிப்பிரியாவும் துருவ நட்சத்திரமாக தமிழரெம் வானில் மின்னிக் கொண்டிருக்கிறாள்.

இந்த நற்றமிழ் காவல் தெய்வத்தின் ஈகத்துக்கு தலை வணங்கி, எம் முன்னே தெரியும் அரசியல்,இராசதந்திரப் பாதையில் நடப்போம்.