ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ்வாஷிங்டன் ஒரு நாள் தனது குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியில் ஓர் இராணுவ அதிகாரியின் மேற்பார்வையில் சில வீரர்கள் கடினமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவ் வீரர்கள் கனமான வெட்டு மரங்களை மிகுந்த சிரமத்துடன் தூக்க முயன்று கொண்டிருந்தனர். இன்னும் ஒரு மனிதன் அவர்களுக்கு உதவி செய்தால் அவ்வேலை சற்று சுலபமாக முடியும்.
ஆனால் இராணுவ அதிகாரியோ அவர்களுக்கு உதவாமல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந் தான்.
இதைக் கண்டவாஷிங்டன் வண்டியிலிருந்து இறங்கி நேராக அங்கு சென்று அவர்களுக்கு உதவியாகத் தோள் கொடுத்தார்.
அவருடைய உதவியால் வீரர்கள் சிரமமின்றி தூக்கினர். வேலை முடிந்த பின் வாஷிங்டன் இராணுவ அதிகாரியிடம் இது போன்ற வேலைகளுக்கு உதவி தேவைப்பட்டால் தயவுசெய்து ஒரு வார்த்தை எனக்கு சொல்லி அனுப்பவும். என்று கூறிவிட்டு சென்றார்.
இதனால் இராணுவ அதிகாரி மிகவும் வேதனை அடைந்தார். அன்று முதல் அவர் மனித நேயத்துடனும் கருணையுடனும் வாழத் தொடங்கினான்.