குடி இருந்த கோயிலுக்கு கவிதாபிஷேகம்
-வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.
அவள் அடி தொழ மறப்போர் மனிதரில்லை
கண் கண்ட தெய்வம் அம்மா நீ
உயிர் கொடுத்த உத்தமி நீ
பத்து மாதம் இன்ப வலி அனுபவித்து பிரசவித்தவள் நீ
உன் விழிநோக உன் தூக்கம் தொலைத்து
எனைக் அன்புக்கடலம்மா நீ
உன் குருதி பாலாக்கி என் உடல் வளர்த்தவள் நீ
என் தந்தை உற்றார் ‘உறவினர்’
எனக் காட்டிய முதலம்மா நீ
நான் தூங்க தாலாட்டு பாடி
உன் தூக்கம் மறந்தவள் நீ
என் நோய் கண்டு வாடியவள் நீ
அம்மா என நாவில் தமிழ் ஊட்டிய தாயே
நான் கண்ட முதல் ஆசான் நீ தாயே
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்க்கே உலகு
எனப் பதிய வைத்தவள் நீ தாயே
எனைப் பள்ளி அனுப்பி அறிவூட்டிய தாயே
என் பசி அறிந்து
உன் பசி மறந்து ஊட்டிய தாயே
நாளும், பொழுதும், மேனியும் எனைக் காத்தவள் நீ தாயே
உன் பிள்ளை மேல்பிறர் பழி சொல்ல தீயில் இடட புழுபோல் துடித்த தாயே
உன் பிள்ளை
குருடு கருப்பு சிவப்பு நல்லவன், கெட்டவன் அறிவிலான்’ கல்விமான்’
என எதுவும் பாராது என் பிள்ளை நீ என போற்றிய தாயே
எத்தனை பிறப்பு எடுத்தாலும் தாயே
உன் கடன் தீர்க்க வழியில்லை தாயே
தாயே நீ வாழ்க வாழ்க )