பென்சில்களே அதிகம் உண்மை பேசுகின்றன

வாள்களும், வேல்களும், ஈட்டிகளும், துமுக்கிகளும் எட்டமுடியாத உயரங்களைப் பேனாக்கள் எட்டியுள்ளன.

உலக வரலாற்றில் பேனாக்கள் உண்மை பேசி பல கோடி உள்ளங்களை வென்றிருக்கின்றன.

வைய வரலாற்றில் பழையதும் புதியதுமாய் எண்ணற்ற ஞானோதயங்களை தந்திருக்கின்றன.

இலக்கை இயம்பும் இலக்கியம் எழுதி மானுடத்தை மென்மேலும் பண்படுத்துபவை பேனாக்கள்.

கணினி விசைப்பலகைகள் கோலோச்ச வரிசை கட்டி வந்துவிட்ட போதிலும் ஓய்ந்திடாத உழைப்பாளி பேனாக்கள்.

வைய எல்லைகளையும் தாண்டி மாந்தன் பிரபஞ்சத்தை அளந்திடவும் துணை நின்றிருக்கின்றன.

நீதிதேவனின் கரங்களில் தவழ்ந்து நீதி சொல்லிவிட்டு தமைத் தியாகித்திருக்கின்றன.

ஆனாலும்…

பென்சில்களே அதிகம் உண்மை பேசுகின்றன.

ஏனேனில்

பென்சில்களே வெள்ளை உள்ளங் கொண்ட சின்னஞ் சிறிய சிட்டுக்களின் தோழன்!

“Pen is mightier than Sward”

Pencils ✏️ are more truthful than Pens as they are friends of Kiddos!