தீபமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீரம்

மருத்துவபீடத்தின் உடற்கூற்றுப் பகுப்பாய்வுக்கு
(Dissection) தனது வித்துடலை அனுப்பி வைக்குமாறு தியாகி திலீபன் எழுத்தில் வைத்திருந்தார்.

தியாகி திலீபனின் விருப்புக்கு அதற்கு அமைய அவரது உடலம் யாழ் மருத்துவபீடத்துக்கு வழங்கப்பட்டது.

“எங்கள் சமூகத்தில்
வழமையாக மூதாளர்களே தங்களது உடலங்களை இந்த உன்னத தேவைக்கு வழங்குவது வழக்கம்.

முதன் முதலில் இளம் உடலம் ஒன்று மருத்துவபீட மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கு வந்தது என்றால் அது எங்கள் தியாகியின் உடலம்தான்.

ஆனாலும் நாங்கள் உடலை முழுமையான உடற்கூற்றுப் பகுப்பாய்வுக்கு
(Dissection) உட்படுத்த மனம் ஒப்பவில்லை.

நீண்ட நாட்கள் தியாகியின் திருவுடலைப் பேணும் உன்னத நோக்கில் ஒரு சில பகுதிகளில் மட்டும் உடற்கூற்றுப் பகுப்பாய்வு அல்லது Window Dissection செய்துவிட்டு கண்ணாடிப் பேழையில் போமலின் இட்டு வைத்திருத்திருந்தோம்.

அந்தக் காலகட்டத்தில் அமைதி காக்கவென வந்த வல்லசுப் படைகள் தந்த தொந்தரவுகள் மத்தியிலும் அந்த திருவுடலை மகோன்னதமாகப் பேணிப் பாதுகாத்தோம்.”

என யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தைச் சேர்ந்த
உடலமைப்பியல் விரிவுரையாளர்
(Anatomy Lecturer) ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சாண்டியல்,கல்கி போன்றவர்களின் வரலாற்றுப் புதினங்களில் படித்த “வீரத்தழும்பு”களை முதன் முதலில்
எங்கள் தியாகியின் திருவுடலில்
பார்த்தோம்.

அந்த வீரத்தழும்பு அவரது கீழ் வயிற்றுப் பகுதியில் இருந்தது.

ஆம், எல்லா இடத்திலும் எல்லா விதத்திலும் தனித்துவம் கொண்ட ஒப்புவை இல்லாத் தேவனே நின் தாழ்பணிகின்றோம்.🖌