பனிப்புலத்திலும் தொடரும் வயவையூரின் கலைப்பயணம்..

631

பாரினில் பல்லாயிரம் ஆண்டுகள்
பண்பட்ட தமிழினத்தின்
பாரம்பரிய நாட்டார் கலைவடிவங்களில் தலையாயது கூத்து.

மக்களின் மண்வாசனையையும்
மக்களின் வாழ்வாதரங்களையும்
மக்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும்…

வெளிப்படுத்தும் வகையில் அமைவதே கூத்துக்கலை.

சந்தம் கலந்து
சங்கதி சொல்லும்
கவிதைகளை விடவும் அழகாக
கூத்துக்கள் பல்வேறு சேதிகளை சுவைபட சமூகத்துக்கு சொல்கின்றன.