நாள் : 28
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 8
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
ஒரு இனத்தில், ஒரு குலத்தில் ஒரு நாட்டில் இருந்த மிகப் பெரிய மகான்களின் பெருமை, அந்த நாட்டு/இன/குல புனித நூல்களில் தெரியும்.
வரலாறுகள் பதிவு செய்வது சாதனையாளர்களை மட்டுமல்ல சாதிக்க முயன்றவர்களையும்.
புராணங்கள் பதிவு செய்வது தெய்வ பெருமைகளை மட்டுமல்ல.. தெய்வ சோதனைகளையும்தான்.
நிறைவான, பூரணத்துவம் கொண்ட மொழிகளைப் பேசும் சான்றோரின் வார்த்தைகள் அவ்வினத்தின் மறைமொழிகளாக மாறுகின்றன. அவை அவர்களின் பெருமையைப் பறைசாற்றுவனவாக இருந்து வருகின்றன. மற்றபடி எதையெதையோ பிதற்றுபவர்களின் புகழ் சில நாட்கள் இருந்தாலும், அவை மறைந்து போய்விடுகின்றன.