உடைந்த முட்டையும் குருவிக் குஞ்சும்.

446

ரமணமகரிஷியின் கவனக்குறைவால் குருவிக்கூட்டிலிருந்த முட்டை வெடித்து விட்டது. தன் தவறால் ஒரு கரு கலையும் நிலை ஏற்பட்டதே.. ஒரு தாயின் மனம் தன் கவனக் குறைவால் காயமடைந்து விட்டதே என மகரிசி கவலையுற்றார்.

நீண்ட மனப்போராட்டத்தின் பின்னர் வெடித்த முட்டையை மெல்லிய துணியால் சுற்று கூட்டில் வைத்தார். பூஜை, வழிபாடுகளை மறந்தார். வெடித்த முட்டை அவரை எந்நேரமும் ஆட்கொண்டிருந்தது.

 

காலை எழுந்ததும் கூட்டிலிருந்து முட்டைய எடுத்து பார்ப்பதும், வெடித்த முட்டை வெடித்தபடியே இருப்பதைக் கண்டதும் அருகிலிருந்து கவலையுறுவதும்.. வெடித்த முட்டை ஒட்ட வேண்டும்; குருவிக் குஞ்சு பொரிக்க வேண்டும் என்று உளமுருகுவதுமாக நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாட் காலை கூட்டைப் பார்த்த மகரிஷி மகிழ்ந்தார். முட்டையில் இருந்த வெடிப்பை காணவில்லை. சுற்றிய துணையை அகற்றி விட்டு குஞ்சு பொரிப்பதுக்காகக் காத்திருந்தார். 

தூய மனதுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் செயற்கரிய செயல்கள் கூட சாத்தியமாகும்.