அந்த நாள் இந்த நாள்..

358

 

2006.. ஜூலை ..09…

உதைபந்தாட்ட உலகில் தவிர்க்க முடியாத நபர்… பிரெஞ்சு தேசத்தின் உதை பந்தாட்ட வல்லுனர்களில் முதன்மையானவர்.. மூப்பின் நிமித்தமும் வேறு காரணங்களின் பொருட்டும் உதை பந்தாட்டத்திலிருந்து ஒதுங்கி(க) இருந்தவரை அன்பால் இழூந்து இணைத்தனர்.. 

ஆம்..  2006 ஆண்டு நடந்த உதை பந்தாட்ட உலகக் கிண்ணத்தை எப்படியாவது சுவீகரித்திட வேண்டும் என்ற குறிக்கோளோடு பிரான்சு களமிறங்கியது. Henry போன்ற திறன் மிகு வீரர்கள் இருந்த அணியின் ஷிடான் எனும் ஜாம்பவானை கெஞ்சி இணைத்தார்கள்..

2006 ஆம் ஆண்டு கிண்ணத்தை நோக்கித் தனியனாக பிரான்சைக் கொண்டு வந்தார் ஷிடான். இறுதிப் போட்டியில் இத்தாலியுடன் மோதல்.. ஷிடானைத் தாண்டி கிண்ணத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை இத்தாலியால்..

ஷிடானை வெளியேற்றினால் மட்டுமே கிண்ணம் வசப்படும் எனும் நிலை இத்தாலிக்கு.. ஷிடானின் தங்கையைப் பற்றி அவதூறு பேசினார் இத்தாலி வீரர்.. ஷிடான் ஆத்திரத்தில் மண்டையால் அவரைத் தாக்கினார்.. ஷிடான் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற. கிண்ணம் இத்தாலி வசமானது..

கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் நிறைந்த உதைபந்தாட்டத்தில் தூண்டலுக்கு தண்டனை இல்லை.. துலங்கலுக்குத் தண்டனை என உதை பந்தாட்ட விதிகள் பலரால் விமர்சிக்கப்பட்டாலும் சகிப்புத்தன்மையும் கட்டுப்பாடும் கட்டாயம் என்பதை உதையோடு உரைத்துக்கொண்டே உள்ளது உதைபந்தாட்டம்..

அந்த நாள் இந்த நாள்..