உலகக்கிண்ண உதைபந்தாட்டம் 2018 – காலிறுதிப் போட்டிகள்

436

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக் கோலாகலமாக அரை இறுதியை எட்டி உள்ளது. அரை இறுதிக்கு பிரான்சு, இங்கிலாந்து, குரோஷியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் முன்னேறி உள்ளன.

நேற்று நடந்த காலிறுதியில் சுவீடனை இங்கிலாந்து 2-0 எனும் அடிப்படையில் வென்று அரை இறுதிக்கு முன்னேறின. இளையவர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியின் விளையாட்டு சிறப்பாக இருந்தாலும் சுவீடன் அணியினர் போட்டியைத் தம்பக்கம் மாற்றக் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டதும் இங்கிலாந்துக்குச் சாதகமாக அமைந்தது.

நேற்று நடந்த இன்னொரு ஆட்டம் என்னைப் பொறுத்தவரை இக்கிண்ணத்தின் மிகச்சிறப்பான ஆட்டம். சோவியத் ஒன்றியம் உடைந்து தனியான பின் கிடைத்த வாய்ப்பை தவற விடத்தயாரில்லை ரஷ்யாவுக்கு.. மேலும் சொந்த ஆடுகளத்தில் கெத்தைக் காட்ட வேண்டிய கட்டாயமும் ரஷ்யாவுக்கு..

அதே போல் ஒவ்வொரு முறையிம் காலிறுதி, அரை இறுதியுடன் உலகக் கிண்ணக் கனவு கலைந்து விடுவதை இம்முறை மாற்ற வேண்டும் என்ற ஓர்மம் குரோஷியாவுக்கு..

இவற்றினால் ஆரம்பத்தில் இருந்த ஆட்டச் சூடு களத்திலும் பார்வையாளர் அரங்கிலும் போட்டி முடியும் வரை ஆறவே இல்லை. ஒருவர் மாறி ஒருவர் கோல் அடித்து சமநிலையில் இருக்க, வழங்கப்பட்ட மேலதிக நேரத்திலும் இதே நிலை நீடிக்க, பெனால்டி கிக் 3-2 எனும் அடிப்படையில் குரோஷியாவுக்கு அரை இறுதிக்கான கதவைத் திறந்துவிட்டது.

ஆம்.. அரையிறுதியில் பிரான்சு, இங்கிலாந்து, குரோஷியா, பெல்ஜியம் ஆகிய நான்கு நாடுகள் மோதத் தயாராகி விட்டன.

20 ஆண்டுகளின் பின் கிண்ணத்தை வெல்ல பிரான்சும், அதுக்கும் மேலாக இங்கிலாந்தும், முதன் முறையாக கிண்ணம் தட்ட குரோஷியா, பெல்ஜியமும் ஆக்ரோஷமாக மோதுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

FRANCE என்ற ஆறெழுத்து நாட்டுக்கா? ENGLAND, BELGIUM, CROECIA ஏழெழுத்து நாடுகளில் ஒன்றுக்கா கிண்ணம்?

பார்க்கலாம்..