குரல்வழித் தமிழ்த் தட்டச்சு -GOOGLE VOICE TYPING

543

தொழில்நுட்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த தமிழும் தவறுவதில்லை. ஆம்.. தற்போது நாம் கதைப்பதை அப்படியே தமிழில் எழுதித்தரும் வசதியை எமக்களித்துள்ளது கூகிள்.

கூகிள் வழங்கும் GBOARD மென்பொருளை எமது அலைபேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.

உள்ளீட்டு மொழியாகவும் குரல் மொழியாகவும் தமிழைத் தெரிவு செய்தால் நாங்கள் தமிழில் சொல்வதை தமிழில் எழுதித்தரும்.

புதிய வகை ஆன்ராயிட் ஃபோன்களில் இந்த வசதி இணைக்கப்பட்டுக் கிடைக்கிறது. சற்றுப் பழைய ஆன்ராயிட் ஃபோன்களில் (ஐ போன் தவிர்ந்த ஏனையவை) கூகிள் ஸ்டோரில் போய் நாம் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும் இந்த GBOARD செயலியை..

 நாங்கள் கதைக்கும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் இடையே வேறுபாடு இருப்பதால் இதனைப் பயன்படுத்துவதில் அசௌகரியங்கள் இருக்கலாம். 

ஆனாலும் 100 சொல்லை மாங்கு மாங்கு என்று தட்டச்சுவதை விட இவ்வாறு குரல்வழி தட்டச்சி விட்டு திருத்துவது சுலபமானது.

மேலும் விளக்கமாக அறிய கீழே உள்ள ஒளிவீச்சு உதவும்.