நெற்றியிலே சுருண்ட முடி சொன்ன சேதி வேறு! காதோரம் நரைத்த முடி சொல்லும் சேதி வேறு!

“தனியன் பண்டி”
“நெய்ப்பண்டி”
“பண்டிக்கருக்கல்”
“வேட்டைக்கறி”
“உப்பவியல்”
“இடியன் துவக்கு” எனத் தொடராய் வந்த சொற்களும் நினைவுகளும் மெல்ல
மெல்ல விடை பெறுகிறது.

கண்டவுடன் கரங்கள் மெல்ல பெக்ககற்றில் கமராவைத் தேடல் கொள்கிறது.

#நாலுகால்_நண்பர்”என
நாற்பதுகளின் நடுப்பகுதியையும் கடந்த என் நெஞ்சம் உரைக்கிறது.

நயமாய்
நட்பு கொள்ளவும் செய்கிறது.

நெற்றியில் சுருண்ட முடி சொன்ன கதை வேறு!

காதோரம் நரைத்த முடி சொல்லும் சேதி வேறு!

ஆம்,
காலதேவன் கன சச்சிதமாய் தன் பணி தொடர்கிறான்.