சோவியத் ரஷ்யா 1959 ஜனவரி 2 ஆம் தேதி லூனா (நம்ம பழைய காலத்து லூனா இல்லீங்க.. இது செயற்கைக் கோள்) 1 என்னும் செய்ற்கைக் கோளை நிலாவை சுற்றி வரச் செய்தது. 1953 செப்டம்பர் 3 ஆம் தேதி நிலாவின் மீது லூனா 2 க் கொண்டு மொதியது.
1966 ஆம் வருஷம் பிப்ரவரி மூணாம் தேதி லூனா 9 நிலவின் மேல் இறங்கியது..
ஆனால் அமெரிக்காவோ 1964 ஆம் ஆண்டுதான் நிலாவில் முதலில் வெற்றிகரமாக மோதியது.
Ranger 7 367 Atlas – Agena 28 July 1964 Lunar impact Success – returned 4308 photos, crash impact
இதற்கு முன்பான பயனியர் விண்கலங்களும் (9 முயற்சிகள்) ரேஞ்ஜர் கலங்களும் (6 முயற்சிகள்) படுதோல்வியைச் சந்தித்தன.
இப்படியாக சோவியத் யூனியன் முண்ணனியிலேயே இருந்தாலும் நிலவில் மனிதனை இறக்க ரஷ்யா ஒரு முயற்சியுமே செய்யவில்லை. ஏன் பூமியின் கதிரியக்க பாதுகாப்பு வளையத்திற்கு அப்பால் மனிதனை அனுப்பவே இல்லை.
ஆனால் அமெரிக்கா மட்டுமே அதுவும் அப்போலோ 8 முதல் அப்போலோ 17 வரையான ஒன்பது முறைகள் பூமியின் கதிரியக்க தடுப்பு எல்லையைத் தாண்டி மனிதனை அனுப்பி இருக்கிறது.
இதுவரை பிண்ணனிக் கதையைப் பார்த்தோம்….
இப்போ கொஞ்சம் முன்னால வருவோம். நிலவிற்கு போய் இறங்கி விட்டு திரும்ப வரணும்னா என்னென்ன நடக்கும்னு தோராயமா பார்ப்போம்.
முதலில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு விண்வெளிக்குப் போகணும். இதற்கு ஸாடர்ன் 5 என்ற ராக்கெட் உபயோகப் படுத்தப் பட்டது.
விண்வெளிக்குச் சென்ற பிறகு நிலவை நோக்கிப் பயணப்பட குறைந்த பட்ச எரிபொருளே தேவை.. கட்டுப்பாட்டு கூடு, நிலவிறக்க கூடு இரண்டும் நிலவை நோக்கி உந்தப்படும்..
நிலவின் சுற்றுப் பாதையை அடைந்த பிறகு நிலவிறக்கக் கூடு பிரிந்து தனது எரிபொருளை உபயோகித்து நிலவில் இறங்க வேண்டும். இதற்கென்று அந்தக் கூட்டில் இராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை மிகக் கட்டுப்பாட்டுடன் எரிக்கப் பட்டால்தான் இறங்க முடியும்.
பிறகு நிலாவில் இருந்து புறப்படும் போது சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் தேவை. இந்த நிலவிறக்கக் கூடு கட்டுப்பாட்டுக் கூட்டுடன் இணைந்த பிறகு… கட்டுப்பாட்டுக் கூடு மறுபடி பூமியை நோக்கிப் பாய வேண்டும்.
பிரச்சனை என்னன்னா, மூன் லேண்டிங் மாட்யூலில் இராக்கெட் எங்க இருந்தது? அதோட சைஸ் என்ன? கண்டிப்பா நாம வீடியோக்களில் பார்த்த மூன் லேண்டர் நிலவின் ஈர்ப்பு விசையை தாண்டி கட்டுப்பாடு கூடு இருந்த ஆர்பிட்டுக்கு வந்திருக்கத் தேவையான அளவு எரிபொருள் கொண்ட ராக்கெட்டுகள் எங்கே என்ற கேள்விக்கு பதில் ????
போனாங்க சரி எப்படி திரும்பினாங்க???
இங்கதான் மக்களுக்கு முதன் முதலா மனிதன் சந்திரனில் இறங்கியது பொய்யோ என்கிற சந்தேகம் ஆரம்பிச்சது..
நீங்களே பாருங்க இந்தப் படத்தை.. . இந்த அமைப்பில இருக்கிற லேண்டர் எப்படிங்க நிலாவின் ஈர்ப்பு விசையைத் தாண்டி நிலவைச் சுற்றி வரும் கட்டுப்பாட்டுக் கூட்டை அடையும்?
பூமிக்கு திரும்பி வந்த சர்வீஸ் மாட்யூல்
சரி இப்படி வச்சுக்குவோம், பூமியில் இருந்து போன இராக்கெட்டின் ஒரு ஸ்டேஜ் திரும்பி வர பயன் பட்டது அப்படின்னு..
அப்போலோ 11 ஐ சுமந்து கிட்டுப் போன சாடர்ன் V விவரங்கள் இங்கே…
இதில மூணு ஸ்டேஜ்கள் இருந்தது.. முதல் ஸ்டேஜ் S-IC, இரண்டாம் ஸ்டேஜ் S-II மூன்றாம் ஸ்டேஜ் S-IVB
முதல் ஸ்டேஜ் 68 கிமீ உயரம் வரை கொண்டு செல்லும். மணிக்கு 6164 மைல் வேகத்தை தரும்.
இரண்டாம் ஸ்டேஜ் 6 நிமிடம் எரியும். இது பூமிச் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும். இது புவிச் சுற்றுப் பாதையில் கட்டுப்பாட்டுக் கூடு மற்றும் நிலவிறக்கக் கூட்டை செலுத்தும். அதாவது இது மொத்தமாக 4200 கிலோ மீட்டர் தூரம் வரை எரியும். (உயரம் அல்ல தூரம் கவனிக்க)
மூணாவது ஸ்டேஜ் சுமார் 191 கி.மீ உயரத்தில் மணிக்கு 17,432 மைல்கள் வேகத்தில் சுற்றுப்பாதையில் இவற்றை ஏவி விடும்..
பிறகு மிச்சம் இராக்கெட் ஸ்டேஜ்ல எஸ்கேப் சிஸ்டம் இருக்கு,, அது 667000 நியூட்டன் த்ரஸ்ட் கொண்டது… இதை மட்டுமே வச்சு நிலாவில் இருந்து பூமிக்கு திரும்பியாகணும். நிலவில் இறங்கி ஏற கூட்டுக்கு 15700 நியூட்டன் த்ரஸ்ட் கொண்ட ஏற்ற இஞ்சினும், 4670 லிருந்து 46700 நியூட்டன் த்ரஸ்ட் கொண்ட இறக்க எஞ்சினும் தனியே இருக்கு
நிலாவை நோக்கி பயணப்பட்ட பகுதி இவ்வளவுதான்…
கீழ் பகுதியில் இருப்பது லூனார் லேண்டர் மேல் பகுதியில் கண்ட்ரோல் மாட்யூல்.
கண்ட்ரோல் மாட்யூல் இப்படித்தான் இருந்ததாம். லூனார் மாட்யூலில் இருந்து கண்ட்ரோல் மாட்யூலுக்கு பறக்கும் போதே உள்ளே செல்ல வேண்டும்…
கண்ட்ரோல் மாட்யூல் பூமிக்கு திரும்பும் அளவிற்கு எரிபொருள் இருந்ததா? என்பதுதான் முதல் கேள்வி…
நல்ல கேள்விதான்னு சொல்றீங்களா… இன்னும் குடையலாம்… சாத்தியமான்னு தான் பார்க்கிறேன்.. சூழ்நிலை அப்புறம் பாக்கலாம.