விகடகவி தெனாலி இராமன்

337

கிருஸ்ணதேவராயர் அரசவை  கூடிய நேரம். அறிஞர் பெருமக்களாலும் பொது மக்களாலும் அரசவை நிரம்பி வழிந்தது. தெனாலி இராமனும் அவர்களில் ஒருவனாக இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

மன்னர் வந்ததும் அவை தொடங்கியது. அண்டை நாட்டு அறிஞர் ஒருவர் அவையை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவருடைய உரையில் அதி மேதாவித்தனமும், தானே உயர்ந்தவன் என்ற ஆணவமும் இருந்தது.

அவையினருக்கு எதுவும் புரியவில்லை. அதனால் அவர்கள் தம்மை விட இவருக்கு அறிவு அதிகம் என்று நம்பினர்.அதனால் அவர்கள் அமைதியாக இருந்தது. அதைக் கண்ட அண்டை நாட்டு அறிஞர் ஏளனத்துடன் உரையை முடித்தார்.

முடிக்கும் போது எல்லாம் மாயை.. உண்பதும் உண்பதை காண்பதும் மாயையே.. எல்லாம் ஒன்றுதான் என்றார்.

அவையில் யாருமே வாயைத் திறக்கவில்லை. சட்டென தெனாலிராமன் எழுந்தான். அறிஞரே நீங்கள் கூறுவது தவறு என்றான்.

அறிஞரைப் பார்த்து, “ஐயா  ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். உடனே இராமன் அப்படி என்றால் எங்களோடு ஏழு நாட்கள் தங்கும் என அண்டை நாட்டறிஞர் ஒத்துக்கொண்டார்..

தெனாலியின் வேண்டுகோளுக்கிணங்க அரசன் ஏழுநாளும் விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அனைவரும் விருந்துண்டு மகிழ அண்டை நாட்டு அறிஞரோ மற்றவர்கள் உண்பதைப் பார்த்துக்கொண்டு பட்டினி கிடந்தார். அடுத்த நாளும் அவ்வறே கழிய, மூன்றாம் நாள் அவ்வறிஞர் பட்டினி தாங்க முடியாமல் தன் கருத்து தவறென ஒப்புக்கொண்டார்.

தெனாலியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டிய மன்னர் அவனுக்குப் பரிசுகள் கொடுத்ததோடு அரசவை விகடகவியும் ஆக்கினார்.