🥀🥀அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🍯🌹💐

196

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எண்ணும் நல்லனவெல்லாம் வாழ்வில் ஈடேறட்டும்.

சனவரி முதல் நாள், அனைவருக்கும் இனிய புத்தாண்டுதான் என்பதில் எவரும் முரண்படார். அடையாளங்களை, அகற்றி விட்டு, எவ்வித பேதமுமின்றி, நிர்வாண மனதுடன் கூறும் வாழ்த்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து.

குறிப்பாக பிரெஞ்சு தேசத்தில் எவராக இருந்தாலும் புத்தாண்டில் சந்திக்கும் போது நல்ல ஆரோக்கியத்தோடும் குன்றாச் செல்வத்தோடும் வாழ்கவென வாழ்த்துவர். அக்கணத்தில் உள்ளூறும் மகிழ்வுக்கு அளவேயில்லை!

குடும்பத்துக்குள்ளேயோ, உறவுகளுக்குள்ளேயோ, சாதிக்குள்ளேயோ, ஊருக்குள்ளேயோ, இனத்துக்குள்ளேயோ, மதத்துக்குள்ளேயோ அடங்கிவிடும் கொண்டாட்டங்களுக்கு நடுவில் இவை எல்லாவற்றையும் கடந்தும் மறந்தும் மனநல்லிணக்கத்துடன் கொண்டாடும் நாளாக சனவரி ஒன்று உள்ளது.

இந்நாளில் உள்ள மனநல்லிணக்கம் எந்நாளும் மறையாதிருக்குமானால், எல்லா நல்லிணக்கமும் நிறைந்து, புதியதொரு உலகம் நமக்காகப் பிறக்கும். அவ்வுலகை உருவாக்க இந்நன்னாளில் உறுதிகொள்வோம்.