நாளொரு குறள் – 08

184

நாள் : 8
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 8

அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது

அறம் என்பது ஒரு கடல். பொருள் என்பது இன்னொரு கடல். இன்பம் என்பது இன்னொரு கடல்.
இப்படிப் பலகடல்கள் உண்டு.
அறவாழி அந்தணன் யார்? அறத்தைக் கற்றவன். அதன்படி ஒழுகுபவன் அறவாழி அந்தணன். அவன் அடி சேர்ந்து அறத்தைக் கற்கவேண்டும்.

அப்படிக் கற்காவிடின் மற்ற கடல்களில் நீந்த இயலாது.
அறம் பொருள் இன்பம் என வரிசைப்படுத்தியதற்கு காரணம் உண்டு. முதலில் எது தர்மம், எது அறம், எது நல்லது என அறிய வேண்டும். பின்னர் அந்த அறவழியில் பொருளீட்ட வேண்டும். பின்னர் அந்த அறவழியில் வந்த பொருளால் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

அப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் முதல்கடமையும் எது நல்லது, எது அறம், எது தர்மம் என்பதைக் கற்றலே ஆகும். அப்படி கற்பதினாலேயே வாழ்க்கையில் பிற கடல்களில் நீந்த முடியும். இல்லா விட்டால் முழுகி விடுவோம்.