Late Mr.Sivagnanasundaram who ran the reputed magazine Sirithiran. 🖌
நெருப்பெரிந்து கொண்டிருந்த நிலத்தில் – நாம்
துவளாதிருக்க தமிழர் எமை சிரிக்கவைத்தவர்!
ஈழத்துக் கேலிச்சித்திரத்துறையின் பிதாமகன்.
தூரிகையையும் பேனாவையும் கையிலெடுத்து அநீதியை எதிர்த்தவர்.
கம்பனைத் துணைக்கு அழைக்காமலே இலக்கை எடுத்தியம்பும் இலக்கியமும் பேசியவர்.
நாகேசையும் கவுண்டமணியையும் அழைக்காமலே எமைச் சிரிக்க வைத்தவர்.
அரசியல் விஞ்ஞானம் (Political Science) பட்டப்படிப்புகள் முடிக்காமலே அரசியல் விழிப்புணர்வை விதைத்தவர்.
கிரேக்கத்து தத்துவஞானிகளை அழைக்காமலே சிந்திக்கவும் வைத்த மாமனிதர்!
சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ஞானி அமரர் மானமிகு சிவஞானசுந்தரம் அவர்களை போற்றுவோம் நாமெல்லாம்!🙏