ஒரு காட்டின் வழியே வேடன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். மரம் ஒன்றில் சில கிளிகள் இருப்பதைக் கண்டான். அவற்றின் மீது அம்பெய்ய அவன் முயன்ற போது, கிளிகள் ஒன்று “வேடா! சற்றுப் பொறு” என்றது. வேடன் என்ன என்பது போலப் பார்த்தான். “நான் சொல்வதை வைத்து நாங்கள் எத்தனை பேர் என்று சொல்” என்றது கிளி. வேடன் சம்மதித்தான்.. கிளி “நாங்களும் எங்களைப் போலவும், எங்களில் பாதியும், பாதியில் பாதியும் உன்னை சேர்த்தால் நூறு வரும். அப்படி என்றால் நாங்கள் எத்தனை கிளிகள் என்று சொல் பார்க்கலாம்” என்றது கிளி. வேடனால் கண்டு பிடிக்க முடியவில்லை. உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.
பதில்…
கிளிகளின் எண்ணிக்கை y எனக்கொள்வோம்.
நாங்களும் (y) எங்களைப் போலவும் (y) எங்களில் பாதியும் (y/2) பாதியில் பாதியும் (y/4) உன்னையும் (1) சேர்த்தால் நூறு..
எனவே, y+y+y/2+y/4+1=100
11y/4=99
11y= 396
y=36
கிளிகளின் எண்ணிக்கை 36 ஆகும்