தன்னிகரில்லாத் தமிழ் வீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் அவர்களின் நினைவேந்தல்

உலக வரலாற்றில் வீரம் சொரிந்த மறவர்களின் வாழ்க்கையைப் படித்தோம். இன மத பேதமின்றி படித்தோம். ஆனால் எங்களை அவர்களின் வழித்தோன்றல்கள் படிக்கும் வரலாற்றினைப் படைத்தோம். அந்த வரலாற்றின் பல பக்கங்களில் இருக்கக் கூடிய பெயர்களில் ஒன்று பால்ராஜ்

ஆதிக்க வெறிகொண்ட அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கையிலோ அல்லது வல்லாதிக்கச் சிந்தனை கொண்ட சீனாவின் கொம்னிசக் கொள்கையிலோ நாம் உடன்பாடு கொண்டவர்கள் அல்ல,

ஆனாலும்….

“அறப்போர்” செய்த தமிழர்களாகிய எங்கள் மீது “ஆயுதப்போர்” திணிக்கப்பட்ட போது நவீன போரியலை எல்லா நாடுகளிடம் இருந்தும் படிக்க வேண்டியே இருந்தது ஆதலால் படித்துக் கொண்டோம்.

அமெரிக்காவின் புகழ்பூத்த தளபதி ஜெனரல் மைக்ஆதரின் வரலாற்றினை படித்தோம்.

மைக் ஆதர் ஒரு போரில் முற்றுகைக்கு உட்பட்ட போது நீர்மூழ்கிக் கப்பல்களில் பயணப்படாமல் சாதாரண மீன்பிடி படகில் பயணப்பட்டு தனது சாதாரண சிப்பாய்களுக்கும் உளவுரண் ஊட்டியதை வாசித்தோம்.

ஏன் மைக் ஆதரின் மனைவி பெயர் “ஜெனி” என்பதைக் கூட அறிந்து வைத்திருந்தோம்.

சீனாவின் போர்க்கலை மேதை மா ஓ சேதுங்கின் வரலாற்றினை சிரத்தையோடு படித்தோம்.

அவர் தன்னுடன் முரண்பட்ட சியாங்கே சேக்குடன் இணைந்து ஜப்பானுக்கு மரண அடி கொடுத்ததை படித்தோம்.

மா ஓ சேதுங் நவீன செஞ்சீனாவை படைத்திட நீண்ட அணிநடை நல்கியதை வாசித்தோம்.

பிரித்தானியாவின் கப்பல்படையின் புகழ்பூத்த கடற்படை தளபதி அட்மிரல் நெல்சனின் வரலாற்றினை படித்தோம்.

நெல்சன் உடலெங்கும் பல வீரத்தழும்புகளை தாங்கி அதன் வேதனையைத் தாங்கிக் கொண்டு கடற்சமர் பல புரிந்து வென்றதை படித்தோம்.

இசுரவேலின் அனைத்து வெற்றிக்கும் வித்திட்ட மோசோ தயானின் வரலாற்றினை படித்தோம். ஒற்றைக் கண்ணை தனது மக்களுக்காய் தனது தேசத்திற்காய் தியாகித்த பின்னும் பல வெற்றிக் களமாடியதை படித்தோம்!

இரஷ்யர்களின் சகாப்தம் படைத்த “ஷ்ராலின் கிராட் சமர்”தனைப் படித்தோம்!

லிபியாவின் விடுதலை வீரன் உமர்மு க்தரின் வரலாற்றினை படித்தோம்.

உலகின் புனித நூல்களில் ஒன்றான திருக்குரானை முறைப்படி கற்பித்து அதன்படி ஒழுகிய அந்த மூதாளர் இத்தாலியின் கொடுங்கோன்மைக்கு எதிராக போராடி வென்றதை பெருமையுடன் படித்தோம்.

ஆனாலும்,

அத்தனை பாடத்தையும் தமிழ்மண்ணில்
ஒரே இடத்தில் பார்த்தோம்!

ஆம்,

தமிழர்தம் போரியல் மேதை சமர்களநாயகன் பிரிகேடியர்பால்ராஜ்🎖 அவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் அதிகம் அதிகம்
பெருமிதம் கொள்கின்றோம்!♟

அசாத்திய திறமைகளால் – எமை
ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய
ஆற்றலன் புகழ்
அவனிவிட்டு அகலாது
அழியாது!🎖

வீரவணக்கம் பால்ராஜ் அண்ணா!✊