லெப் தாவீதன் (சபாநாயகம் சுபாஷ்)

02/11/1999இல்!…

ஆம், அந்த நாள்தான் தமிழர்சேனையின் ஓயாத அலைகள் – 02 நடவடிக்கையின் ஆரம்பம்.

தமிழர் சேனையின் ஒவ்வோர் வீரனுக்கும் #பத்துக்கைகள் #முளைத்தது!

#உனக்கும்தான் #மாவீரனே!

ஒட்டுசுட்டானில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஓங்கி அடித்தது!

நெடுங்கேணியின் வெடிவைத்தகல் பழம்பாசி,தண்டுவான் தொடக்கம் மேற்கே மன்னார் நிலத்தின் பலகைமுனைவரை அல்லது திருக்கீஸ்தீஸ்வரம் சந்திவரை பகை விரட்டி ஓர் புதிய புலர்வை தமிழர் எங்களுக்காய்த் தந்தீர்கள்!

அதில் நீயும் ஓர் ஓர்மம் கொண்ட வீரனாய் நின்றாய்!

உன்னுடன் இரடையாய் பிறந்தவளும் இன்னோர் செங்களத்தில் செல்வி எனும் நாமம் தாங்கி வீரநங்கையாய் நின்றாள்!
களத்திலே விழுப்புண்ணும் தாங்கினாள்!

எம் தலைவன் விரும்பும் உதாரண தலைவனானாம் சுபாஷ் சந்திரபோஷின் பெயரை அல்லவா நீ பிறந்த போது உன் அப்பா (திருமிகு சீனிக்குட்டி சபாநாயகம்) உனக்குச் சூடி அழகு பார்த்தார்!

வடபோர் முனையில் பல பத்து சிங்களனை வீழ்த்தி வீரா நீ வீரச்சாவு அடைந்தது வரை உன்னைப் பற்றி உரைக்க இன்னமும் எம்மிடம் நிறையவே உண்டு.

எனினும்…

தம்பி உனக்கும் மற்றும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் கூறி தற்காலிகமாக முடிக்கிறேன்! …

ஆனாலும் நின் காதையைத் தொடர்ந்தும்
உரைப்பேன் என் தமிழ்ச் சொந்தங்களுக்கு!
⚓️🙏⚓️