நாளொரு குறள் – 16

289

நாள் : 16
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 6

விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது

வானத்தில் உலவும் மேகத்தின் துளியாம் மழை விழாவிட்டால் பசும் புல்லின் நுனியைக் கூட காண இயலாது.

பசும்புல் ஒரறிவு உயிர். உடலில் ஐந்தறிவுப் பொறிகள் தலையிலேயே அமைந்துள்ளன. தலை என சொல்லும்பொழுது மிக முக்கியமான என்று பொருள் வர இதுவே முக்கிய காரணம்.

தலை என்பதற்கு ஆரம்பம் என்றும் பொருள் உண்டு. தழை என்றால் வளர்ச்சி.. தளை என்றால் கட்டு. அடிமைத்தனம்.

ஆக பசும் புல்லின் நுனியைக் காண இயலாது என்பதை விட புல் கூட தலையெடுக்காது என்றுதான் சரியாகப் பொருள் கொள்ள வேண்டும். ஓரரறிவு உயிரே இருக்காது என்றால் ஆறறிவு உயிர் எப்படி தலையெடுக்கும்?