உலகக்கிண்ண உதைபந்தாட்டம் 15/06/2018

399

இந்த வெற்றிக்கிண்ணத்துக்கான, நேற்றைய போட்டியில் சௌதிக்கு எதிராக ஐந்து கோல்களை அடித்து ரஷ்யா அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்றைய நவீன உதைபந்தாட்டத்தின் பிற்றப்பிடம் இங்கிலாந்து ஆயினும் பண்டைக்  காலத்திலே பந்தை உதைத்தல், நிறுத்தல் போன்ற விளையாட்டுகள் நடந்திருக்கின்றன.

கிரேக்க, உரோம எழுத்தாளர்கள் அப்பேரரசுகள் காலத்தில் (கிமு 200, 300 காலப்பகுதியில் பந்தை வைத்து விளையாடியதை பதிவு செய்துள்ளனர். ஆனால் இவை காற்பந்தை ஒத்ததாக இல்லை.

கிமு-300-100 காலப்பகுதியில் சீனாவில் சீனாவில் ஆடப்பட்ட பந்தாட்டம் சப்பானுக்கும் கொரியாவுக்கும் பரவியது.

சப்பானுக்குப் பரவிய இந்த விளையாட்டிலேயே முதன் முறையாக இரு கம்பங்கள் நட்டு வலைசுற்றி பந்தை அடிக்கும் முறை உருவாக்கப்பட்டது.

ஆனாலும் நடுவில் ஒற்றைக்கம்பமும் ஒரு முனையில் இரட்டைக் கம்பமும் என்றே விளையாடப்பட்டது. பந்தை கீழே விழ விடாமல் உதைத்தல் என்ற இன்னொரு விதத்திலும் பந்தாடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியப் பழங்குடி, நியூசிலாந்துப் பழங்குடியினர் ஆடிய ஆட்டங்கள் சிலவுக்கும் இன்றைய உதை பந்தாட்டத்துக்கும் ஒற்றுமைகள் உண்டு.