உத்தமர் உறவு

சித்த நினைவும் செய்யும் செயலும் நீயென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே

                                                      தாயுமானவர்

 

சித்த நினைவும்
செய்யும் செயலும்
நீ என வாழும்

இதன் பொருள் இறைவனுக்காக இறை நினைவில் எல்லாம் செய்வது என்று பலரும் பொருள் சொன்னாலும்….
சித்தம் என்பது ஆழ்மனம்.. மனசாட்சி என்று சொல்கிறோமே அது. அதை இறைவனாகவே கொள்ளவேண்டும். அதன் வழி நடக்க வேண்டும்.

செய்யும் செயலையும் தெய்வமாக என்ன வேண்டும். ஒரு தொழிலை பணம், புகழ் இத்யாதி புறக்காரணங்களுக்காக செய்யாமல் அதை தெய்வ சேவையாக நினைத்து செய்தல்..

இப்படி சிந்தனையிலும் செயலும் இருக்கப் பெற்றவர் உத்தமர்.
அந்த உத்தமருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும்.
மருத்துவத் துறையில் இந்த கொள்கை இருந்தது, கல்வித் துறையில் இந்தக் கொள்கை இருந்தது.
இன்னும் ஒரு சில மனிதர்களிடம் இருக்கிறது.
சித்த நினைவு, சித்தர்களெல்லாம் சித்தனாகிய முதல் சித்தன் சிவனின் நினைவு.. மாறாத ஒரே திட நினைவு. கைவசமாகும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு நீங்காத மாறாத நினைவு…
பராபரக் கண்ணியின் விளக்கத்தை  கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்

 

 

அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே.

 

அறிவாகி நின்றவன் இறைவன். அந்த அறிவிலிருந்து நல் திட சிந்தனையாகவும் நற்செயல்களாகும் வெளிப்படுகிறான்.
உறுதியான எண்ணமும், அதே போன்ற உறுதியான செயலும்… இறைவனை நோக்கியே இருக்கும். மற்றவை மாறிக் கொண்டே இருக்கும்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.
இவை மட்டுமே உத்தமர்களின் உறவுகள். உத்தமர்கள் என்றுமே இவற்றைப் பேணி இவற்றுடனே வாழ்வார்கள்.

 

 

அறிவும், சிந்தனையும் செயலும் இறைவனே!!! உத்தமர்க்கு அவனே உறவு!!!

 

அந்த உறவை நாடுகிறார் தாயுமானவர். நாமும் அவர் உறவை நாடுவோம்