கிரிக்கெட் பாடங்கள் : தோனியின் நிர்வாகவியல்

334

தோனி தலைமைப் பண்பு மிக்கவர்..

தோனி அதிர்ஷ்டம் மிக்கவர்

தோனி புத்திசாலி இப்படி ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டே போகிறார்கள். தொட்டதெல்லாம் துலங்குகிறது தங்கக் கை.. இந்திய அணியைக் கரை சேர்க்க வந்தத் தோணி – தோனி என புகழ்மாலைகள் குவிகின்றன.

வாழ்வில் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்க எதாவது இருக்கும். என் மனதில் நான் விதைத்து உரமிட்டு வளர்க்கும் நிர்வாக் இயல் சூத்திரங்கக்கும் கோட்பாடுகளுக்கும் தோனி மிகச் சிறந்த உதாரணமாக விளங்குவதை நான் கண்ட காட்சி நீ காணவில்லை என கண்ணதாசன் போல பாடிப் புகழ எண்ணுகிறேன்.

கிரிக்கெட் ஒரு சூதாட்டம். கிரிக்கெட் ஒரு நாடகம். கிரிக்கெட் ஒரு செட்டப் என்போரே மன்னிக்க. வாழ்க்கையைப் பற்றியும் சிலர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த விவாதத்தை இந்தத் திரியில் தவிர்க்க. இது கல்விக்கான திரி.

முதல்பாடம்: உங்களுக்கு நன்கு நினைவிருக்கும் என்னுடைய பொன்மொழிகளில் ஒன்று.

முடிவெடுத்தால் 50 சதவிகிதம் தவறாகச் சாத்தியம் இருக்கிறது. முடிவெடுக்கா விட்டால் 100 சதவிகிதம் தவறாகத்தான் முடியும். (லொள்ளு வாத்தியாரின் நான் பிரதமரானால் திரி)

அச்சுப் பிசகாமல் அப்படியே வாழ்ந்து காட்டுகிறார் தோனி.எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தெளிவான பாதை குழுவிற்கு இருக்கிறது. இன்று என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான நோக்கத்தோடு களத்தில் இற்ங்குகிறது அணி. திட்டங்கள் தவறாய்ப் போகும் பொழுது எதன் மீதும் பழி சுமத்தப் படுவதில்லை. ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட கடைசி ஓவரின் கடைசி பந்து வரை வியூகங்கள் வகுக்கப் பட்டுக் கொண்டேதான் இருந்தது. பொத்தாம் பொதுவாக உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்ற அறிவுரை தராமல் இது குறிக்கோள். இத்தனை ஓட்டங்கள் எடுக்கப் பட வேண்டும் இத்தனை விக்கெட்டுகள் எடுக்கப் பட வேண்டும். இத்தனை ஓட்டங்களுக்குள் எதிரியை மடக்க வேண்டும் எனத் தெளிவாக ஒவ்வொரு வீரரும் இருக்கிறார்.

ஆக அணிக்கு மைல்கற்கள் தெளிவாகத் தெரிகிறது. தலைவனுக்கு சேர்விடம் தெளிவாகத் தெரிகிறது. வெற்றிகரமான பயணத்திற்கு இதை விட என்ன தேவை?

இன்னும் வரும்.