இறைவன்

447


எங்கும் எதிலும எப்போதும் உலகை இயக்குபவர் இறைவன்.இறைவன் ஒருவராகத்தான் இருக்க முடியும்; ஆனால் மனித இனம் தன் கலாசார; மொழி; இன; நாடுகளுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில்; வடிவங்களில் அழைத்து வழிபடுகின்றனர்.



பூமியில் மனித இனத்தைவிட உயரிய இனமே இல்லை என்ற ஆணவத்தால் அனைத்தையும் ஆட்டிப்படைக்கின்றனர்.அனால் இந்த உலகம் எப்படி உருவானது; பூமியில் உள்ள அனைத்தும் எப்படி உருவானது என எவராலும் சொல்ல முடியாதபடி வைத்தது இறைவனின் அற்புதம்.



இறைவன் எங்கும்;எதிலும்; எல்லா வல்லமையும் படைத்தவர் என்றால் ஏன் இப்படி; அப்படி எல்லாம் நடைபெறுகிறது எனக் கேட்கலாம்.அதுதான் இறைவன் விளையாட்டு.

உதாரணமாக பூமியில் தோன்றிய மனிதர்களே இறக்காமல் வாழ்ந்தால் மற்றவர்கள் எப்படி வாழமுடியும். ஆசை கொண்ட மனித அறிவு அதை ஏற்க மறுக்கிறது. பிறப்பும்; இறப்பும் மாறி; மாறி நடந்தால்தான் உலகம் இயங்கும்.



இந்து மதத்தில் ஏழு பிறப்புக்கள் உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிறப்பும் அவரவர் செய்யும் பாவ; புண்ணியங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. அதிலும் மனித பிறப்பு அன்பு; பாசம்; கருணை; அறிவு; ஆசை கொண்ட உன்னத படைப்பாக படைக்கப்படுகிறது.

போன ஜென்மத்தில் செய்த பாவ; புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்கள் வாழ்வு எழுதப்படுகிறது. அதைத்தான் விதி என்கிறோம். நான் நல்லவனாக; நல்லதை செய்து வாழ்கிறேன் ஆனால் துன்பங்களும்; துயரங்கள்; நோய்கள்; கவலைகள்; இழப்புக்கள் வருகிறது என நாங்கள் எல்லோரும் கதறுகிறோமே ஏன்?

இப் பிறப்பில் நடப்பவைகளைத்தான் நாங்கள் உணருகிறோம்.முந்தைய பிறப்பில் என்ன பாவ; புண்ணியங்கள் செய்தோம் எனத் தெரியாது. அதன் விளைவாகக்கூட இருக்கலாம். அல்லது அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறப்பு கிடைக்கத்தான் இந்த ஜென்மத்தில் துன்ப; துயரங்கள் ஏற்ப்படுகின்றனவோ?

அழிய வரம் பெற்று வாழ ஆசைப்படும் மனித மனம் எதையும் ஏற்க தயாரில்லை. பலர் சொல்வார்கள் எந்த பாவமும் செய்யாத எங்களுக்கு இவ்வளவு; கஸ்ரங்கள்; துன்பங்கள்’துயரங்கள்; நோய்கள் இன்னல்கள் வருகிறது; அதர்மம்; தீங்கு செய்து கொண்டிருப்போர் நல்லாய் இருக்கிறார்களே என.

ஒருவேளை போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாகவும் இருக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் இதற்குரிய தண்டனை நிச்சயமாக கிடைக்கும். எவரும் தப்ப முடியாது.

ஆதி காலத்தில் மனிதர்கள் இறைவனுடன் நேரடியாக பழகிய கதைகள் பல உண்டு. அதிலும் இந்து மதத்தில் நிறைய உதாரணமாக கண்ணன் பல பிறப்புக்கள் எடுத்ததும்; ஔவையார் சிவபெருமான் குடும்பத்தில் பழகியது.இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்ப ஏன் இப்ப இப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என கேப்பது இயற்கைதானே. ஆதி காலத்தில் தங்களை விட உயர்த்தவர்களை அல்லது தங்களுக்கு ஏற்ப்பட்ட துன்பங்களை போக்கியவர்களை வழிபட்டிருக்கலாம்.ஏன் இப்பவும் இப்படியான சம்பவங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதோடு இறைவன் நேரடியாக தோன்றி செயல்படாது எதோ ஒரு உயிர் மூலமாகத்தான் செய்வார்.அது ஏதுவாகக் கூட இருக்கலாம்.இறைவன் இங்கே; இப்படித்தான் இருப்பர் எனத் தெரிந்தால் அவரையும் விலை பேசி அடிமைப்படுத்தக்கூடியதுதான் மனித உயிர்.



விஞ்ஞானத்தில் எத்தனையோ செய்ய முடிந்தும் ஒருவர் இன்ன நாள்’ இதனை மணி;இந்த நொடி பிறப்பார் என சொல்ல முடியுமா?அல்லது இறப்பார் என சொல்ல முடியுமா? இறைவன் இல்லை என வாழ்வோரும்; வாதிடுவோரும் தாங்கள் எங்கை; எப்போது; எப்படி இறப்போம் என சொல்ல முடியுமா?

 மூட நம்பிக்கைகள் இன்றி அவரவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வது தவறு இல்லை.
 


அன்புடன் 

வ.பொ.சு.—
வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்