என்னத்தைச் சொல்ல?
அமெரிக்காவுக்கு என்று ஒரு பலம் உண்டு. அதாவது எதையும் முழுசா, கன கச்சிதமா செய்யாமலயே, முன்னணி தொழில் நுட்பம் என்ற பெயரில் காசு பார்ப்பாங்க.
இரண்டாம் உலகப் போர் நடந்தப்ப கூட பல குறைகளுடன் கூடிய ஆயுதங்களை அவசர அவசரமா இங்கிலாந்து போன்ற நேச நாடுகளுக்கு வித்து காசு பாத்தவங்க.
இரண்டாம் உலகப் போர் முடிஞ்ச பின்னாடி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் போர்ச் செலவில் களைத்துப் போயிருக்க அமெரிக்காவின் பலத்திற்கு சவலாக இருந்த ஒரு நாடு இரஷ்யா.
ஹிட்லரின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த இரஷ்யா, ஜப்பானின் சரணுக்கு காரணமாக இருந்த அமெரிக்க இரண்டு பேருக்கு மத்தியில யார் பெரியவன் என்ற கௌரவப் போராட்டம் ஆரம்பமாயிடுச்சி..
இரஷ்யா பொதுவுடைமை நாடா ஒரு இரும்புக் கோட்டையா இருந்தது. அமெரிக்கா முதலாளித்துவ நாடா இருந்தது..
உண்மையாச் சொல்லப் போனா விண்வெளித் துறையின் முக்கியமான விஞ்ஞானிகள் இருந்தது ஜெர்மனியில்..
அந்த விஞ்ஞானிகளை வசப்படுத்தியே அமெரிக்காவும் இரஷ்யாவும் விண்வெளித் துறையில் வளர்ச்சி காண திட்டமிட்டன.
இந்த கோல்டு வாரில் தான் தான் பலசாலி.. என்பதை மற்றவங்களுக்கு நிரூபித்து மற்ற நாடுகளை தன் பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டு உலகை ஆள இரண்டுமே துடித்தன.
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலா இருக்கணும் என்றால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ராக்கெட்டுகள் தேவை என்பதால் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமா இறங்கினது இரஷ்யா.. இரஷ்ய அறிஞர் கான்ஸ்டண்டின் ஸ்யோவஸ்கி 1800 களில் வடித்த, பல கட்ட, திரவ எரிபொருள் இராக்கெட் கட்டுமான அடிப்படைச் சமன்பாடுகள் இன்னும் உபயோகத்தில் இருக்கு.
1920 ல் ஜெர்மன் விஞ்ஞானிகள் வடிவமைத்த திர எரிபொருள் இராக்கெட்டுகள். ஜெர்மனி இந்த இராக்கெட்டுகளை போருக்காகவே உபயோகப் படுத்த வடிவமைத்தது.
1943 ல் விண்வெளியைத் தொடக் கூடிய இராக்கெட்டுகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் உருவாக்கினர்.(ஏ-4 வகை, தலவர் பீனெமியூண்ட்). இதை 300 கி.மீ தூரம் சென்ரு தாக்கக் கூடிய ஏவுகனைகளாக மாற்றி, 1000 கிலோ வெடிமருந்தை தாங்கிச் செல்லக் கூடிய திறனுடையதாக ஜெர்மன் உபயோகித்தது.
1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிஞ்சதும் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்ய நாடுகள் ஜெர்மனியில் ராக்கெட் தொழில் நுட்பங்களை கவர்ந்து கொண்டு, ஜெர்மானிய விஞ்ஞானிகளையும் தூக்கிச் சென்றன..
இதற்கு பின்னால தான் குளிர் யுத்தம் ஆரம்பிச்சது.. அமெரிக்கா வான்படையை வலுவாக்கியது. ஐரோப்பிய நாடுகளிலும் துருக்கியிலும் தன்னுடைய படை தளங்களை உருவாக்கி வச்சது. இரஷ்யாவை இங்கிருந்து தாக்கலாம் என்கிற நிலை இருந்தது.
இரஷ்யாவுக்கோ அந்த மாதிரி படை தளங்கள் அமெரிக்கா அருகில் இல்லை. அதனால் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைதான் ஒரே வழி அப்படின்னு ஸ்டாலின், பிடிபட்ட ஜேர்மானிய விஞ்ஞானிகளையும், இரஷ்ய விஞ்ஞானிகளையும் வச்சி மாஸ்கோ பக்கத்தில கிம்கி என்கிற இடத்தில ஏவுகணை கட்ட ஆரம்பிச்சார். எப்படின்னா டிசைன் எல்லாம் இரஷ்ய விஞ்ஞானிகள் செய்வாங்க. எதாவது பிரச்சனை, புரியலைன்னா மட்டும் ஜெர்மன் விஞ்ஞானிகள் உதவி செய்யணும்.
இதை வச்சு R-1 என்கிற ஏவுகணையை உருவாக்கினாங்க. (ஜெர்மனின் V-2 என்கிற இராக்கெட்டோட டிசைன், அவங்க கிட்ட இருந்து கவரப்பட்ட பொருள்களை வச்சே இதை வடிவமைச்சி இருந்தாங்க. 1957 ஆகஸ்ட்ல R-7 என்பதுதான் முதன் முதல்ல உண்டாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை. இதையே கொஞ்சம் மாத்தி விண்வெளி பயணத்துக்கு ஏற்ற மாதிரி செஞ்சாங்க.
ஆனா அமெரிக்கா என்ன செஞ்சது, ஜெர்மனி விஞ்ஞானிகளுக்கு நல்ல சம்பளம் தந்து அவங்களையே டிசைன் பண்ணித் தரச் சொன்னது. 1959, ஜூலை மாதம்தான் கண்டம் விட்டு கண்டம் தாவும் அட்லஸ் D என்கிற ஏவுகணையை அமெரிக்கா வெற்றிகரமா பறக்க விட்டது.. இதைத்தான் விண்வெளி ஆராய்ட்சிக்கு அமெரிக்கா பயன்படுத்தியது.
1957 ல் ஜூலை மாசம் 29 ஆம் தேதி அமெரிக்காவுக்கு செயற்கை கோள் வான்கார்ட் அனுப்புறதில தோல்வி.. ஆனால் இரஷ்யாவோ ஜூலை மாசம் 31 ஆம் தேதி ஸ்புட்னிக்கை அனுப்பி விட்டது..
நாலுமாசம் கழிச்சு அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர் 1 அப்படிங்கிற செயற்கைக் கோளை அனுப்பி வச்சது. ஆனால் ஸ்புட்னிக் முந்திகிட்டது அமெரிக்காவில் பெரிய அதிர்ச்சி அலையையே உண்டாக்கிருச்சி. இதற்கு பின்னாலதான் அமெரிக்கா நாசமா போகணும்னு முடிவு பண்ணி, நாசாவை ஆரம்பிச்சது. ஆட்சியாளர்கள் நம்ம பாகிஸ்தான் இந்தியா பிர்ச்சனையை வச்சே நம்ம அரசியல்வாதிகள் குளிர்காய்வது போல நிலா மேல மனுசனை நடக்க வைப்போம்னு கொள்கை முழக்கம் போட்டு மக்களோட உணர்வுகளை மாத்தினாங்க.. இரஷ்யன் ஒண்ணுக்கு, ரெண்டுக்குத்தான் போவான். நாம மூணுக்கே போவோம்னு கோஷம் போடாத குறை..
தொடரும்.
கொசுறுத்தகவல் : இன்னுமே அமெரிக்கா தலைமை ஏற்று விண்வெளியில் அமைத்திருக்கும், பன்னாட்டு விண்வெளி ஆய்வகத்தில் விண்வெளி வீரர்கள் தங்க அமைக்கப்பட்ட விண்வெளி அறைகளுக்கு இரஷ்யாவையே நம்பி இருக்கு அமெரிக்கா. அது மட்டும் ஏன் அப்படிங்கிறது மிகச் சிறந்த கேள்வி…
அடுத்த பாகம் வாசிக்க