வயவையின் கவிச்செல்வி மணிமேகலை கைலைவாசன்

476

கவிஞர்கள் கற்பனை உலகின் பிரதிநிதிகள் என்பது தவறான கற்பனை. அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட கவியுலகின் குடிமக்கள் கவிஞர்கள்.

கற்பனையில் மிதந்து கவியுலகம் சென்று அங்கே கவி மொழியில் பதிக்கப்பட்டிருப்பவற்றை எமக்காக, எம்மொழியில் மறுபதிப்புச் செய்பவர்களே கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கவிஞர்களில் ஒருவர்தான் கவிதாயினி மணிமேகலை கைலைவாசன். அண்மைக்காலங்களில் இவரின் கவிதைகளை காணுறும் வாய்ப்புகள் கிட்டியது. படிக்கப் படிக்க இரசனை மீண்டது.

மிகவும் தேர்ந்ததொரு கடத்தல்காரி கவிச்செல்வி மணிமேகலை கைலைவாசன். அவர் நடந்து போகும் பாதைகளில் கடந்து செல்பவைகளில் இருந்து ஒற்றைக் கவிதையையேனும் கடத்தி வந்து விடுகிறார். அக்கவிதையை அப்படியே எங்களுக்கு கடத்துகிறார் – சிரமம் எதுவுமின்றி, இயல்பாகக் கடத்தி விடுகிறார். அவர் தேர்ந்ததொரு கடத்தல்காரி என்பதில் எவருக்கும் ஐயமிருக்காது, இப்போது.

அவ்வப்போது தனக்குள் புகுந்து எடுத்து வரும் ஆன்ம ஈக (ஆன்மீக) முத்துகளை சரமாக்கி எங்கள் மேல் ஏவிவிடும் குறிதப்பாச் சொல்லாளியான இவர் வயவையின் கவிச்செல்வி என்பதால் நாமும் பெருமிதம் கொள்ளலாம்.

இவருடைய கவிப்பயணத்தை ஆவணப்படுத்தும் ஆசையுடன் அவரை அணுகி உள்ளோம். உங்களிடமும் கவிதாயினி பற்றிய தகவல்கள் இருந்தால் vayavans@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.