அவுஸ்ரேலிய வயவர்களின் வசந்தவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

84

வயாவிளான் மக்கள் ஒன்றியம் – அவுஸ்ரேலியாவால் ஆண்டு தோறும் நடத்தப்படும் வயவர்கள் ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது.

ஊரின் சித்திரைத் திருவிழாவை ஞாபகமூட்டும் விதத்தில், பெருந்திடல் ஒன்றில், கொண்டு வந்த உணவை பகிர்ந்துண்டு மகிழ்ந்தும், பலூன் ஊதி உடைத்தல் சங்கீதக் கதிரை போன்ற வேடிக்கை விநோத விளையாட்டுக்களை கூடி விளையாடிக் குதூகலித்தும் வயவர்கள் தம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒன்று கூடல் அமைந்தது.

அது மட்டும் அல்லாமல், மீள் மலரும் எங்களூருக்கு உதவும் நோக்கத்துடன் இயங்கும் ஒன்றியத்தின் ஆண்டறிக்கையும் கடந்த கால எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விளக்கமும், மீளெழுச்சிக்கான உதவும் கரங்களின் முக்கியத்துவமும் மீளவும் எடுத்துரைக்கப்பட்டது.

கடல் கடந்து இயந்திய உலகில் உழன்று கொண்டிருக்கும் வயவர்களுக்கும், உழைத்துக் களைத்த இதயங்களும் இவ்வாறான ஒன்று கூடல்கள் புத்துணர்வளிக்கும் ஊக்கியாக அமைவதோடு, எங்கள் அழகூரை நோக்கி எம் கவனம் திருப்பும் வண்ணம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

1 COMMENT

  1. பாறை பிளந்து பருவம் அறிந்து
    பக்குவமாய்‬ பயிர் செய்த
    ‪பரம்பரையில் ஊறி திளைத்தவர்கள் வயவர்கள்.

    ஏகனின் ஏகப் பிரதிநிதி
    ஏர் ஏந்திடும் உழவனேதான்
    என்பதை உய்த்தறிந்து கொண்டவர்கள் வயவர்கள்.

    வயாவிளான் வாழ் மக்கள் வாழ்வு வளம் பெற மானம்பராய்
    வேழ முகத்துக் கடவுளும் உத்தரிய மாதாவும் துணை இருக்க
    பிரார்த்திக்கின்றேன்!

Comments are closed.