COVID – 19 சுயநலமாக இருப்போம்.

54

சீனாவின் வூகான் மாகாணத்தில் தோற்றம் பெற்று உலகெங்கும் தொற்றித் தொடரும்  கோவிட் 19 கற்றுத் தந்தது “சுயநலமாக இருங்கள்”.

கோவிட் 19 க்கான எவ்விதமான தீர்க்கமான மருத்துவமும் தடுப்புகளும் கண்டுபிடிக்கப்படா நிலையில், ” கோவிட்டோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள்” எனக் கோடிட்டு உள்ளிருப்புக் காலம் நிறைவுக்குக் கொண்டு வரப்படும் வேளையில் “சுயநலமாக இருத்தல்” மிகவும் அவசியமாகும்.

தொற்றை அறிந்தவுடன் வூகான் மாகாணத்திற்கும் தனது ஏனைய மாகாணங்களுக்கும் இடையிலான சகல வழித் தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு தன்னைத் தான்  காத்துக்கொண்ட சீனா,

தன் நாட்டில் அப்போது தங்கியிருந்த வெளிநாட்டினர் தங்கள் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற ” பரந்த மனப்பாங்குடன்” பிறர் நலம் பேணாதிருந்திருந்தால் கோவிட் 19 உலகத்தொற்றாக வளர்ந்திருக்காதிருக்கக் கூடும்.

எனவே, அத்தகையதொரு பிறர் நலன் பேணலை நாம் தவிர்த்து சுயநலம் பேணுவது கோவிட் 19 உடன் நாம் வாழ எமக்கு உதவும் என்பதோடு கோவிட்-19 இற்குப் பின்னான எம் வாழ்க்கை முறையின் மையமாகவும் இருக்கும்.

உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டிய சுயநலச் செயலாக, வெளியே செல்கையில் சுவாசக் கவசம் அணிவதை கட்டாயமாகக் கொள்வோம். நாம் தும்முக் போதோ இருமும் போதே எம்மிலிருந்து மற்றவருக்கு தொற்று ஏற்படக் கூடும் என்பதற்காக அல்ல, மற்றவர்கள் தும்மும் போதோ இருமும் போதே அவர்கள் மூலம் நமக்கு தொற்றுவதை தவிர்க்க இந்தச் சுயநலச் செயல் எமக்கு உதவும்.

அங்காடிகளில் நுழைய முன்னரும் அங்காடிகளிலிருந்து வெளியேறிய பின்னரும் எங்கள் கைகளை கிருமி நீக்கிக் கொண்டோமேயானால், எம்மிடமிருந்து மற்றவர்களைக் காக்கின்றோமோ இல்லையோ மற்றவர்களிடமிருந்து எம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

ஏதாவதொன்றுக்குக் காத்திருக்கும் நேரத்தில் முன்னால் நிற்பவரை நெருக்கும் நோக்கில் நெருங்கி நின்றோமேயானல், அவரால் நமக்கு ஆபத்து நேரலாம். எனவே நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளல் எம்மை பாதுகாத்தல் சுயநலத்தின் இன்னொரு அங்கமாகும்.

வெளி நிலங்களில் நாங்கள் துப்பும் எச்சில், நாங்கள் சிந்தும் மூக்குச் சளி, நாங்கள் எறியும் சளி துடைத்த துண்டு எல்லாமே நாங்கள் வீட்டுக்குத் திரும்பும் போது எங்களுடன் கோவிட் 19 ஐக் கூட்டி வரும்.  எனவே இவற்றைத் தவிர்ப்பது எங்களைப் பாதுகாக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் எம்மை நாம் மற்றவர்களிடமிருந்து காத்துக் கொள்ளும் சுயநலம் இனி வருங்கால வாழ்வியல் முறைக்கு இன்றியமையா ஒன்று.

ஏனெனில், கோவிட் – 19 உடன் முடிந்து விடப் போவதல்ல இவ்வனர்த்தம்.  மீண்டும் இயற்கை எம்மீது போர் தொடுக்கும். அந்தப் போர் கோவிட் – 19 ஐ விட வீரியம் மிக்கதாகவும் பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கக்கூடும்.

தாக்குதம் அணியாகவே நாம் வாழ்ந்திடல் கடினம்.. தற்காப்பு அணியாகவும் நாம் வாழ்ந்திடல் வேண்டும். தற்காத்தல் கூட ஒரு விதத்தில் தாக்குதல் தான்.. எனவே கோவிட் விடயத்தில் “சுயநலமாக இருப்போம்”