நாளொரு குறள் 65

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் : 5

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

மிக நேரடியான செய்யுள் இது. ஒவ்வொரு நல்ல இல்லறத்தானுக்கு, மிகச் சிறந்த உடலின்பம் அவர்களின் குழந்தைகளைத் தொடுதல். குழந்தைகளின் சொற்கேட்டலே செவிக்கு இன்பம்.

ஐம்புலன்களில் இரு புலன்களை சொல்கிறார் இங்கே.

கண்ணாடியில் கண்ணால் நம் உருவை அனுபவிக்க இயலும். ஆனால் தொடுதலின்பம் என்பது சுயத்தை விட நம் பிம்பத்தின் மூலமே அதிகம். அதே போல் கேட்டலின்பமும். தானே பாடி தானே கேட்பது இப்பொழுது சாத்தியம். அப்பொழுதில்லை. தன்னை ரசித்தலின் பகுதியே தன் பிம்பமான குழந்தையை ரசித்தல். தன்னையே ரசிக்காதவன் கூட தன்னையே ரசிக்காதவன் கூட தன் குழந்தையை ரசிப்பா