“எழுமதி” என நீ பெயர் கொண்டாய் “முழுமதி” என்றே நாம் பொருள் கண்டோம்!

“எழுமதி” என நீ பெயர் கொண்டாய்
“முழுமதி” என்றே நாம் பொருள்
கண்டோம்!

ஆம்,டொக்ரர் ஆன்ரி என எல்லோராலும் அன்போடும் பெருமதிப்போடும் அழைக்கப்பட்ட வைத்தியப் பெருந்தகை பத்மலோஜினி அவர்களின் முதலாவது இயக்கப்பெயர் “சாந்தி” ஆகும்.

அவர் எழுதிய முதலாவது, இரண்டாவது மருத்துவ நூல்களிலும் சாந்தி எனும் பெயரையே குறிப்பிட்டு உள்ளார்.

கடற்புலிகளினால் சாகரவர்த்தனா கப்பல் தகர்ப்பின் போது கடலில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல் கப்டன் ‘கொமடோர் அஜித் பொயகொட’ தனது நூலில் டொக்ரர் ஆன்ரி தனக்கு கருணையுடன் சிகிச்சை செய்ததையும் எழுதி உள்ளார்.

அந்த நூலில் கொமடோர் அஜித் பொயகொட அவர்களும் ஆன்ரியின் பெயரை Dr.சாந்தி என்றே குறிப்பிடுகின்றார்.

சாந்தி எனும் பெயர் வடமொழியாகிய
சமஸ்கிருதச் சொல்(–शान्ति–ஶாந்தி) என்பதை தெரிந்து கொண்ட போது அவருக்கு அந்த பெயரில் நாட்டம் இருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பில் தூய தமிழ்ப்பெயர் வைக்கத் தொடங்கிய காலத்தில் ஆன்ரி தனது பெயரை தானே “எழுமதி” என மாற்றினார்.

தங்கத் தமிழையும் தமிழர் தேசத்தையும் உயிர் மூச்சென சுவாசித்த எழுமதி கரிகாலன் எனும் எங்கள் பெண் தெய்வத்தை காலமெல்லாம் நினைவிருத்துவோம்.

-அறத்தலைவன்-