தமிழ் வீர விரதம்..

நஞ்சை நெஞ்சில் சுமந்தவர்கள் சுமந்த
சுமைகள் கொஞ்சமா?

பருப்பும் சோறும் உண்டுவிட்டு
காவல் அரணில்
விழித்திருந்தனர்.

கத்தரிக்காயும் சோறும் உண்டுவிட்டு
காட்டு வித்தனில்
களமாடினர்.

சோயா மீற்றும் சோறும் உண்டு
குடும்பிமலையிலும் தியாகவனத்திலும்
காவியமாகினர்.

கத்தரிக்காயும் பருப்பும் சேர்ந்து
சாப்பாட்டு வாகனத்தில் வந்தால்
சந்தோசப்படுவார்கள்.

புகை கண்டால்
பகை தாக்கிடுவான்
என்பதால் எங்கோ ஓர் மூலையில்
உலையேறும் உணவு களமுனைக்கு வர வியர்த்து மணத்து விடும்.

ஆனாலும்…

அண்ணனைக் குறை கூறாமல் சாப்பிடுவார்கள்.

காட்டுப் பன்றியை இரகசியமாய் சுட்டுச்
சாப்பிட்ட இந்த நாள் அவர்கள் வாழ்வில் திருவிழா!