புலிகள் தேசத்தின் பொந்தன் புளிகள்!

“Knowledge is like the trunk of a baobab tree:no one’s arms are long enough to encompass it”

-Saying from the Volta region of Ghana 🇬🇭- 

தமிழர் தாய்நிலத்தில் உள்ள மிகவும் பழமையான மரங்களில் ஒன்று மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனையில் உள்ள பெருக்கமரம் ஆகும்.

நெடுந்தொலைவில் உள்ள தீவாகிய நெடுந்தீவு, மொட்டைக்கறுப்பன் நெல் விளையும் பூநகரி, முத்து விளையும் எங்கள் மன்னாரிலும் இந்த பெருக்கமரங்கள் உண்டு என்பது தனிச்சிறப்பு ஆகும்.

மன்னாரின் நகரை அண்டிய பிரதேசத்தில் உள்ள பெருக்கமரம் பெருமளவு உல்லாசப்பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது.

சிங்கள தேசத்தில் அனுராதபுரத்தில் உள்ள வெள்ளரசு மரம் 2000 வருடப்பழமை கொண்டமரமாக கொள்ளப்படுகிறது. அதே போல தமிழர் தேசத்தில் உள்ள பழமையான மரங்களை நாங்களும் கொண்டாடுவோம்.

 

500ஆவது அகவைக் கடந்தும் செழிப்புடன் வாழும் இப் பெருக்கமரம் (Baobab Tree) அரேபிய கடல் வாணிகர்களால் 1477ஆம் ஆண்டளவில் எங்களின் மன்னார் மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது!

<

p style=”text-align: justify;”>ஆபிரிக்காவின் மடகஸ்காரையும் அவுஸ்ரேலியாவையும் தாயகமாகக் (Native tree to Africa,Madagascar and Australia) கொண்டது இந்த பெருக்கமரம் (பயோபாப்)!

பெருக்கமரத்தின் தாவரவியல்ப் பெயர் அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia grandidieri) என்பதாகும்.

<

p style=”text-align: justify;”>பெருக்கமரம் (பயோபாப்)தான் மடகஸ்காரின் தேசிய மரம்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மரத்தின் அடிப்பாகம் பெருத்தும், கிளைகள் சிறுத்தும் காணப்படுவது இம்மரத்தின் சிறப்பு ஆகும்.

அந்நாட்களில் புகழ் பெற்று விளங்கிய மாந்தைத்துறைமுகத்துக்கு கொண்டு வந்தவர்கள் அரேபிய வணிகர்களாம்.👍

<

p style=”text-align: justify;”>உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இம்மரத்துக்கு அழகுற வேலி அமைத்துப் பேணிப் பராமரித்து வரும் திருச்சபையினர் பெருமைக்குரியவர்கள்!
பாராட்டுக்குரியவர்கள்!!🙏

நெடுந்தீவில் உள்ள பெக்க மரம்

<

p style=”text-align: justify;”>அதே போல யாழ் வயாவிளானிலும் பல விசித்திரமான பழைமை வாய்ந்த மரங்களும் உண்டு. 

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் தலவிருட்ஷமான புளியமரம் காண்போரை வியக்கவைக்கும்.

முதலியார் ஆலயத்தில் உள்ள இரட்டைக் கிளுவை மரமும் யாழில் வேறு எங்கும் இல்லாத அளவில் பெருத்து உள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

மண்ணை நேசிப்பது போல
மரங்களையும் நேசிப்போம்!