உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் – காலிறுதி

269

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் காலிறுதியை எட்டி உள்ளன. நேற்று நடந்த காலிறுதியில் பிரான்சு-உருகுவே, பெல்ஜியம்-பிரேசில் மோதின.

பலமான காப்பாட்டத்தைக் கொண்டிருக்கும் உருகுவே அணியை பிரான்சு துவம்சம் செய்தது. இளம் வீரர்களைக் கொண்ட பிரான்சு அணியில், தனி ஒருவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமை எதிரணிகளை அச்சுறுத்தும் பலமான ஆயுதம். பிரான்சுக்கு இத்தொடரில் வெற்றிகளைப் பெற்றுத்தந்த ஆயுதமும் இதுவே.

இன்னொரு காலிறுதி ஆட்டமாக பிரேசில்-பெல்ஜியம் மோதின. ஆக்ரோஷமான தாக்குத்தல் ஆட்டம் நடத்திய பிரேசில் ஆரம்பத்தில் அசத்தினாலும் சேம்சைட் கோல் போட்டதன் மூலம் அவர்கள் மனதளவில் உடந்துவிட்டார்களோ எனத் தோன்றியது. அந்தளவுக்கு சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

மறுவழமாக பெல்ஜியம் உற்சாகம் பற்றி  தாக்குதல், தற்காப்பு என இரு வகையிலும் பட்டையை கிளப்பிய பிரேசிலை வென்றது.

இதன் மூலம் அரை இறுதியில் பிரான்சும் பெல்ஜியமும் வரும் ஞாயிறு மோத உள்ளன.

இன்றைய காலிறுதியில் இங்கிலாந்து -சுவீடன், குரோஷியா-ரஷ்யா மோதல் நடைபெற உள்ளது.