வயவர்கள் கல்வித் தேட்டத்துக்கான அறிவித்தல்.

166

ஆலைகளும் கல்விச் சாலைகளும் கொண்டு சிறப்புற்றிருந்த வயவையூர், பேரினவாதத்தின் பிடியில் அகப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு வெறும் சிதிலமாக   எம்மிடம் வீசப்பட்டுள்ளது.  அச்சிதிலங்களிலிருந்து எமதூரை மீள் கட்டமைக்கும் நோக்கில் பன்னாடுகளில் உள்ள வயவர் அமைப்புகள் தன்னெழுச்சியுடன் ஈடுபட்டு வருகின்றன. அவ்வமைப்புகளின் தன்னிகரில்லா முயற்சியால் வயவையூர் சிதைவிலிருந்து மீளெழ தொடங்கி இருந்தது.

ஆனாலும் அவ்வமைப்புகளின் வினைத்திறன் மேம்பட வேண்டும் என்ற நோக்கிலும், பாழடைந்த எமதூர் மீளவும் அழகூராக ஆவது இடையில் நின்றிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் கருத்துகளை முன்வைத்திருந்தது வயவன் இணையம்.

வயவையின் மீளெழுச்சி தடையின்றி நிகழ, வயவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; வயவைக்கான அமைப்புகள் தமக்கான நிரந்த ஈட்டங்களை தேட வேண்டும்; தேட்டம் ஒன்று அவசியம்; போன்ற கருத்துகளை வயவன் இணையம் முன் வைத்திருந்தது.

இவற்றை செயலாக்க வயவன் இணையம் ஆரம்பகட்ட உரையாடல்களை மேற்கொண்ட போது, வரவேற்பு அதிகமாக இருந்தது. அதை விட அதிகமாக “வயவன் இணையம் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, தலைப்பாகைக்கு ஆசைப்படுகிறது” என்ற காட்டமும் காட்டப்பட்டது. அதனால் வயவன் இணையம் மௌனமாகியது.

தற்போது வயவன் ஆசைப்பட்ட திட்டங்களில் ஒன்றான “தேட்டம்” ஆனது உதவும் கரங்கள் அமைப்பினால் செயலாக்கம் காண உள்ளது.  இதற்குக் காரணமான அனைவரையும் வயவன் இணையம் பாராட்டோடு கரம் பற்றிக்கொள்கிறது.

நிற்க, கல்விக்கான அறக்கட்டளையை ஒத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தாயக, பன்னாட்டு வயவர்களை அங்கத்தவராகக் கொண்ட இந்தக் குழு வெற்றியடைய வயவனின் வாழ்த்துகள்.

அறிவிப்பில் குறிப்பிட்டது போன்று, இணையக் குழுமம் அமைத்து ஆக்க பூர்வமாக கலந்துரையாடி திட்டச் செயலாக்கத்தை கெதிப்படுத்த வயவனின் பணிவான வேண்டுகோள்..

குழுவினரின் ஊக்கத்துடன் பன்னாட்டு வயவர்களின் வகிபாகமும்தான் இந்த திட்ட நிறைவேற்றத்தின் கட்டாய அலகுகள் ஆகும். எனவே பன்னாடுகளில் வாழும் வயவர்கள் மனமுவந்து அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து தேட்டத்தை வெற்றியடையச் செய்ய வயவன் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

தேட்டத் திட்ட வரைபின் படி இலக்கை அடைய மூன்றாண்டுகள் ஆகுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. குதிரைப்படை வயவர்கள் வழிவந்த எம் வேகத்தால் இக்கால எல்லை ஓராண்டாகக் குறைந்தாலும் வியப்பில்லை.. நம்பிக்கையுடன் கரம் கோர்ப்போம்..

வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சு வெளியிட்ட அறிவித்தல்

வணக்கம்

♦”சேர்வோம் செயலாற்றுவோம்.”♦

புலத்தில் வாழும் எம் வயவையின் உறவுகளே!
நாங்கள் எல்லோரும் ஒன்று
சேர்ந்து ஒரு பொது வேலைத்திட்டத்தினுடாக
வயவையை நோக்கி பயணிக்கவேண்டிய
அவசியத்தை நாம் அன்புடனும்
பணிவுடனும் தங்கள் முன்
வைக்கின்றோம்.

இன்று எம் மண்ணில் நின்று
மக்களின் முக்கிய தேவையறிந்து கை
கொடுத்துதவும் அமைப்பு உதவுங்கரங்கள்
என்பதை நாமறிவோம்.இவ்வமைப்பின்
நம்பிக்கை,வெளிப்படை,வீரியம்,
போன்றவற்றின் உச்சம் அவர்களது 2018ஆம் ஆண்டுக்குரிய
வருடாந்தக் கணக்கறிக்கையிலிருந்து
வெளிப்பட்டிருந்தது.

மீழ் எழுற்சிக்கான இவ்வமைப்பின் வாழ்வாதாரத்
திட்டங்களின் முதன்மையான
திட்டம் கல்விக்கான திட்டமாகும்.
கல்விமூலம் அறிவான ஆரோக்கியமுள்ள
சமுதாயத்தைஉருவாக்கி வயவையை
மீண்டும் எழுற்சிகொள்ள வைப்பதே
இதன் நோக்கம்.

கடந்த ஆண்டு ஏறக்குறைய இருபது இலட்சம் ரூபா மீழ் எழுற்சிக்காக
செலவிடப்பட்டுள்ளது.இந் நிதியினை
மனமுவந்தளித்த நம் உறவுகள் என்றும்
போற்றலுக்குரியவர்கள்.
இருப்பினும்
மேலும் எத்தனையோ நம் உறவுகள்
உதவும் கரங்களின் கரம் பற்ற அங்கே
தவங்கிடக்கின்றனர்.

இவ் வாழ்வாதாரத் திட்டங்களை
தொடரும்போதுசில தடைகள் சவாலாக
எம் முன் எழுந்து நிற்கின்றன.இது எங்களுடன்முடிந்துவிடுமா?இல்லையேல்
எங்கள் பிள்ளைகளும் எங்களைப்போல்
வயவையின்பால் ஈர்ப்புடன் இருந்து
நிதிப்பங்களிப்பு செய்வார்களா?
இல்லை இதுசாத்தியமே இல்லை.ஆகவே உறவுகளே
இப்போதே நாம் எல்லோரும்
இணைந்து மாற்றுத்திட்டம் ஒன்றினை
உருவாக்கி வயவையின் மீழ் எழுற்சியை
உறுதிப்படுத்துவது மிக
அவசியமானதல்லவா?

இதற்கான ஒரு வரைபுத்திட்டத்தை
நாம் முன்வைக்கின்றோம்.பின்
எல்லோரும் கருத்தாடி செயற்படுவோம்.
தலைமுறை தலைமுறையாக நீண்ட
காலத்திற்கு எம் வாழ்வாதார உதவி
அங்கே தொடரப்பட வேண்டுமாயின் ருபா
ஒருகோடியை ஏறக்குறைய ஐம்பதாயிரம்
ஈரோக்களை வங்கியில்
வைப்பிலிட வேண்டும்.

குறைந்தது நூறு வயவையின்
மைந்தர்கள் இத்திட்டத்திற்குள்
உள்வாங்கப்படின் ஒவ்வொருத்தருக்குமுரிய
பங்களிப்புத் தொகை ஐந்நூறு
ஈரோக்களாகும்.
இதனை மூன்று ஆண்டுக்குள் முடிப்பின்
மாதாந்தம் அண்ணளவாக பதினான்கு
ஈரோக்கள்.உள்வாங்குவோரின்
அளவைப் பொறுத்து இதில்
மாறுதல் ஏற்படலாம்.

அன்பு உறவுகளே! நாங்கள்
மாதாந்தம் கொடுக்கும் இந்த
பதினான்கு ஈரோக்களால் திக்குத்திசை
தெரியாமல் போர்க்கால வடுக்களை
சுமந்து வாழும் எம் சொந்தங்களுக்கு
எந்த இடைத்தடங்களுமின்றி
தோள் கொடுக்க முடியும்.அத்தோடு
நாம் பிறந்து வளர்ந்த வயவை
மாதாவுக்கு செய்யும் ஒரு நன்றியெனக்
கொண்டு மனநிறைவும்
பெருமையும் கொள்ளமுடியும்.

மக்கள் பங்களிப்பை தாம் விரும்பிய
வயவைசார் சமூகநல அமைப்புகளினூடாகவோ அல்லது
நேரடியாகவோ உதவுங்கரங்களுக்கு
அனுப்பிவைக்க முடியும்.
எதுஎவ்வாறாயினும் கணக்குப்
பதிவுகளில் அவரவர் பெயர்கள்
குறிப்பிடப்படும்.

இத்தொலைநோக்கு நிதித்திட்டம்
பிரான்ஸ் மக்கள் ஒன்றியத்தினதோ
அல்லது வேறெந்த ஒன்றியங்களினதோ,
அல்லதுசமூகநல அமைப்புகளினதோ
அல்ல.மாறாக புலம் பெயர்ந்து வாழும்
வயவர்களின் பயன்மிகு திட்டமாகவே
இதை நாம் முன்னெடுக்க விரும்புகிறோம்.
எங்களுக்குள் இருக்கும் சிறு சிறு
முரண்களைத் தள்ளிவிட்டு திட்ட
நோக்கத்தின் மையத்தை நோக்கி
நகர்வோம் வாருங்கள்.

ஆகவே சொந்தங்களே! இதற்காக
தொலைபேசியில் குழுமம் ஒன்று
அமைத்து கருத்துக்களைப்
பகிர்ந்து செயல் வடிவம் கொடுப்போம்.
பல கேள்விகளும் சந்தேகங்களும்
எழுவது இயல்பே.திறந்த மனதுடன்
பேசுவோம்.

புலம்பெயர்ந்து வாழும் வயவைமண் பிரசவித்த கல்வியாளர்களே,
தொழிலதிபர்களே,விளையாட்டு
வீரர்களே,மண்பற்றுள்ள இளையோரே,
ஊடகவியலாளர்களே,இலக்கியவாதிகளே,
அறிவியலாளர்களே எழுந்து வாருங்கள்.
பொதுவழி கண்டு வயவையை
நிமிர்த்தி எம் தார்மீகப்
பொறுப்பினை நிறைவு செய்வோம்.

வயவையின் நலன்சார்
அமைப்புகளே! இணையதளங்களே!
இத்திட்டத்தை மக்கள் முன்
கொண்டுசெல்ல உதவுங்கள்.
வயவர்களே! இதை அதிகளவில்
பகிர்ந்து எல்லோரிடமும்
கொண்டுசெல்லுங்கள்.
♦சேர்வோம் செயலாற்றுவோம்.♦

இலகுவிற்காக தற்காலிக
செயற்குழு.
க.சுப்பிரமணியம் 0016472958775.
மு.மகேஸ்வரராஐா.0016477077167
த.இளங்கோ 0041763861482.
செ. இராசன் 0041798472251.
திருமதி.தேவராஐா 0033751558306.
இ.சாந்தலிங்கம் 0033751228162.
கி.தவராஐா 0033613554268
மா.இராஐ்குமார்0033651110232.
இ.சிவகுமார் 0033652927281.
சு.மோகனதாசன் 0033628694033.
சு.ஆறுமுகதாசன் 0033698257898.
சு.உமாசுதன் 0033652226867.
வ.யோகராஐா 00447540345531

க.சுரேந்திரன் 0061431270340.
ம.சுகிந்தன் 0061402818708.
இ.கணேசலிங்கம் 0094763867492

நன்றி.