‘ARTIFICIALLY MAKING POVERTY IS THE WORST FORM OF VIOLENCE.’
பஞ்சமும் கந்தகப்புகையும் – அரசின் வஞ்சகமும் எம் மண்ணில் தஞ்சம் புகுந்திருந்த காலத்து ஒளிப்படம்.
தமிழர் நிலத்தில் அரசாங்கத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் ( Artificially making Poverty) காரணமாக மந்தபோசனைக் குறைபாடு காணப்பட்டது.
மந்தபோசனைக் குறைபாடு உள்ள ஓர் பிள்ளைதான் இப் படத்திலிருப்பது.
மந்தபோசனைக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள் இச் சிறுபிள்ளையில் அடையாளம் (Malnutrition had been Diagnosed) காணப்பட்டது.
Our mobile medical team had diagnosed both Bitot’s spots, Xerophthalmia in her young eyes!
பொருளாதாரத் தடைகள் (Economic embargo)தமிழர் நிலங்களில் மிக மோசமாக அரசினால் அமுலாக்க செய்யப்பட்ட போது இதே போல பல பிள்ளைகள் காணப்பட்டனர்.
உள,உடல் ரீதியான நீண்ட நாள் பாதிப்புகளை எம் இளம் சந்ததிக்கு ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைக்காக பின் வந்த நாட்களில் சத்துணவுத் திட்டங்கள் தீட்டப்பட்டு அமுலாக்கம் செய்யப்பட்டது.
அந்த அருந்திட்டத்தின் பின்னே வண பிதா M.X கருணாரட்னம் (கிளி பாதர்), யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவபாலன் ஆகியோர் இருந்தனர்.
இத் திட்டத்தினை பெருமளவு ஆளணியுடன் தமிழீழ சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரசியல்துறை அமுலாக்கம் செய்தது.
புலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வியர்வையுடன் தளத்தில் இருந்த தேசப்பற்று மிக்க மனிதர்களும் நம்பிக்கை எனும் பெரும் கைகளால் கைகோர்த்து அன்று பயணித்தனர்.
செயற்கையாக உண்டாக்கப்பட்ட வறுமை ஒழிப்பில் ஒன்றுபட்ட தமிழர்கள் கணிசமான வெற்றியும் கண்டனர்.
அதே வேளை, இலங்கை அரசினால் செயற்கையாக உண்டாக்கப்பட்ட மிக மோசமான வன்முறைகள் ஒன்றல்ல இரண்டல்ல.
அவைகளில் ஒன்றுதான் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான பொருளாதாரத் தடை என்பதை தமிழர்கள் என்றுமே மறந்துவிடமாட்டார்கள்.