பட்டினி

547

 இறைவன் மனிதர்களைப் படைக்கும்போது அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் படைத்தார். 

அப்போ ஏன் பட்டினி என்னும் வார்த்தை மனிதர்களுடன் ஒட்டிக்கொண்டு இந்த உலகில் கேட்க்கின்றது. மனிதர்கள் வாங்கி வந்த வரமா? ஆம்.. பட்டினி என்பது மனிதர்களுக்கு மனிதர்களால் உருவாக்கப்படடதே. 

ஆதியில் அனைவரும் வாழ வேண்டும் என எண்ணிய மனிதன் படிப்படியாக ஆசைகளை வளர்த்துக்கொண்டு தான் மட்டும் வாழ வேண்டும், தன் குடும்பம் வாழ வேண்டும், தன் உறவுகள், சொந்தங்கள், மக்கள், இனம் மட்டும் வாழ வேண்டும் என ஆசையை உண்டாக்கி இறைவன் படைத்த உலகை பங்கு போட்டுக்கொண்டனர்.

மற்றவர்களுக்கும் தேவையானவற்றை கொடுக்காது தன் உடமையாக, தனக்கே தனக்காக மாற்றினான்.

அதை தக்க வைக்க எத்தனை போராட்ட்ங்கள். துரோகங்கள், சூழ்ச்சி, ஏமாற்று, பகை, அடிமைத்தனம், அழிப்புகள் என்னும் எத்தனையோ செய்கின்றனர்.

தான் மட்டும் வாழ வேண்டும் மற்றவர்கள் எப்படி வாழ்ந்தால் எனக்கென்ன  என நடப்பது. நீதியாவது, அநீதியாவது.. என்ற மனதுடன்  மற்றவர்களுடையதையும் எடுத்துக்கொள்வது, பிடுங்கிக்கொள்வது என மனிதனின் அழிச்சாட்டியம் அடங்க மறுத்துப் பட்டினியை உருவாக்கியது. 

அழகிய  உலகினை பங்கு போட்டு அழித்து, அடிமைப்படுத்த விழைந்தனர்.

பட்டினி இருந்தால்தான் ஒருவர் இன்னொருவரிடம் கையேந்துவர் 

அப்போது தான் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கலாம் என்ற தீய எண்ணத்தில் மனிதன் மிதக்கிறான்.  

பட்டினியைக் கண்டு பயப்படாதோர் எவரும் இல்லை. உலகில் நடக்கின்ற அனைத்துக்கும் மூல காரணம் தான் வாழ மற்றவர்களை அழிப்பது.

பிறக்கும் போது இறப்பு எப்போது என தெரியாதபோது நான் மட்டும் வாழாது மற்றவர்களையும் பட்டினி இன்றி வாழ வைப்போம். வாடிய பயிர்களைக் கண்டு வாடினேன் என வாழ்வோம்.  

பிறந்தான், இறந்தான் என வாழாது, வாழ்ந்தார், மறைந்தும் வாழ்கிறார் என வாழ்வோம். பட்டினியை ஒழிப்போம்.

அன்புடன் 

வ.பொ.சு—வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்