நாளொரு குறள் 66

நாள் : 66
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் :6

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

மழலையைப் போல இனிமையானது இன்னொன்றில்லை, அதுவும் தன்னுடைய குழந்தையின் மழலையைப் போல இனிமையானது எதுவுமே இல்லை.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது மட்டுமல்ல.. வேறு எதையுமே கேட்கத் தோண விடாதது ஒருவனின் குழந்தையின் மழலை.

குழந்தையின் மழலை கேட்பவனுக்கு விவாதங்கள் செய்ய மனம் இருக்காது. மற்றவர்கள் சொல்வது பற்றி அவனுக்குக் கவலையில்லை.

அவனுக்கு அது மட்டுமே போதும். வேறு எதுவும் தேவையாக இருப்பதில்லை