கணவன்–மனைவி

407

ஆணும் பெண்ணும் பிறப்பில் அடைய வேண்டிய பந்தம் கணவன் -மனைவி ஆகும். மானிடராக பிறந்து எதத்னையோ கட்டங்கள், பரிமாணங்கள், உயர்வுகள், அடைந்தாலும் கணவன்-மனைவி என்ற பந்தம் தான் வாழ்க்கையின் முழுமையான கட்டமாக கருதப்படும். அதனால்தான் இந்து மதத்தின் கடவுள்கள் கணவன்-மனைவி உறவுகளாக உள்ளனர். அதிலும் பிள்ளைகள் எனவும் தரிசிக்கப்படுகின்றனர்.

திருமணம் ஆகாத எத்தனையோ மகத்தான மனிதர்கள் இருப்பது விதி விலக்கு. பிள்ளைகளுடன் அன்பான குடும்பமாக வாழ்வது சொர்க்கம். இறைவன் அழகான உலகினை படைத்து மனிதர்களை படைத்ததின் நோக்கமே ஆண் -பெண் இருவரும் கணவன்-மனைவியாக இணைந்து பிள்ளைகளை பெற்று தங்களுக்குப் பின் அடுத்த சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்று.

கணவன்-மனைவி என்பது ஆணும்-பெண்ணும் இணைந்து பிள்ளைகளை பெறுவது மட்டுமில்லை. ஈர் உடல் ஓர் உயிர் என வாழ்வது. உதாரணமாக கணவனுக்கு நோய் என்றால் மனைவி கவனிப்பது. மனைவிக்கு நோய் என்றால் கணவன் கவனிப்பது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஒருவர் மேல் ஒருவர் அன்பு காட்டுவது. தங்கள் குடும்ப நலனையே உயிராகக் கொண்டு பல விட்டுக்கொடுப்புகள், தியாகங்கள் செய்தல். இடை இடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து ஈர் உடல் ஓர் உயிர் என வாழ்வது. கணவன் ஊதியத்துக்கு ஏற்ப மனைவி வாழ்வது; மனைவிக்காக தன் ஆசைகளை துறப்பது. ஒருவருக்கு ஒருவர் வீட்டுக் கொடுப்பது. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு முறை ஒரு உளவியல் வகுப்பு நடந்தது. ஆசிரியர் வந்து நாம் ஒரு விளையாட்டு விளையாடப்போறோம் என கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து; இந்த பலகையில் உனக்கு முக்கியம் எனத் தோன்றும் 30 பெயர்களை எழுதுங்கள் என்றார். எழுதிய பின் உனக்கு முக்கியம் இல்லாத 5 பெயர்களை அழிக்கச் சொன்னார். அப் பெண் தன்னுடன் பணிபுரியும் 5 பேரின் பெயர்களை அளித்தார். இப்படியே அழித்து அழித்து கடைசியில் 4 பெயர்கள்தான் இருந்தன. அது அவரின் பெற்றோர், கணவர், மற்றும் ஒரே மகன்.

இப்போது இரண்டு பெயர்களை அழிக்கச்சொன்னார். வேறு வழி இல்லாமல் அரை மனதுடன் தன் பெற்றோர் பெயரை அளித்தாள். மீண்டும் ஒரு பெயரை அழிக்கச் சொன்னார். அப் பெண் அழுது கொண்டே மகன் பெயரை வேதனையுடன் அழிதார்.

ஆசிரியர் ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்திர்கள். உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்தார்கள்.உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை ஆளித்தார். அதற்க்கு அப் பெண் இருக்கலாம் என் பெற்றோர் எனக்கு முன்பே இறந்துவிட முடியும். என் மகன் தன் வாழ்க்கைக்காக என்னை பிரிந்துவிட முடியும்; ஆனால் என் கூட இருந்து தனது வாழ்க்கையை எனக்காக அர்ப்பணிப்பவர் கணவர் மட்டுமே’ அதனாலதான் என்றார். எல்லோரும் கை தட்டி அவரை பாராட்டினார்.

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி எனவும். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எனவும் சந்தேகப் புயல் அடித்தால் சந்தோசப் பூ உதிரும் இடை இடை ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அன்பு’ விட்டுக்கொடுப்பு’ விளங்கிக்கொள்ளுதல் கொண்டு களைதல் வேண்டும். ஆணுக்கு-பெண் சமம் அதாவது எல்லோரும் மனிதர்கள் என சமமாக நடப்பது மிக மிக முக்கியமாகும்.

அன்புடன்

வ.பொ.சு–வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்