ஹிட்லரின் சிந்தனைகள் சில.

749

சர்வாதிகாரி என்று பெயரெடுத்தாலும் ஹிட்லரின் உழைப்பும் முன்னேற்றமும் இலக்கை அடைய அவர் கடைப்பிடித்த விதிகளும் பிரமிக்க வைப்பவை. தவறான விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தாமல் சரியான விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தி இருந்தால் உலகத்தால் ஹிட்லர் கொண்டாடப்பட்டிருப்பார்.

தன் வாழ்வில் ஹிட்லர் கடைப்பிடித்த கட்டளைகளிலிருந்து பத்துக் கட்டளைகள் கீழே..

1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.

2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.

3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.

4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.

5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!

6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!

7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.

8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.

9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.