பருவங்கள்

இன்றைய அறிவியல் பருவங்களை நான்காக பிரித்திருக்கிறது.
இந்த பருவங்கள் சூரியனின் இரு அயனங்களான உத்தராயணம் – தட்சிணாயனம் என்பதை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த வரையறைகள் நிலநடுக்கோட்டுக்கு வடபகுதியில் உள்ள நாடுகளுக்கு அப்படியே பொருந்தும். தென்பகுதி நாடுகளுக்கு கோடை காலம் குளிர்காலமாகவும் மழைக்காலம் இலையுதிர் காலமாகவும் இருக்கும்.
இந்த பருவகாலங்கள் மாறுபாடுகளுக்கு உள்ளாகின்றன. அதற்கு முக்கிய காரணம், பூமியின் அச்சும் சுழற்சிக்கு உள்ளாவதுதான்.
இந்தச் சுழற்சி 26000 வருடங்களுக்கு ஒரு முறை நிறைவு பெறும். பூமியின் அச்சு சுழற்சி பற்றி சுருக்கமாக காண்போம்.
கி.மு 12000 ஆண்டு வாக்கில் வேகாஸ் துருவ நட்சத்திரமாக இருந்தது. இது சுழற்சியின் காரணமாக கி.பி 1000 ஆண்டு வாக்கில் பூமியின் அச்சு போலாரின் என்னும் துருவ நட்சத்திரத்தை நோக்கி மாறியது. இது மேலும் சுழற்சியின் காரணமாக 13000 ஆண்டுகள் கழித்து வேகாஸ் என்னும் நட்சத்திரத்தை நோக்கி மாறும்.
இப்படி அச்சு சுழல்வதின் காரணமாக பருவங்கள் பின்னோக்கிச் சுழல்கின்றன. இன்றைய நிலையில் ஆங்கில அறிவியலின்படி
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் – வசந்த காலம்;
மே, ஜூன், ஜூலை – கோடைக்காலம்;
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் – இலையுதிர்காலம்;
நவம்பர், டிசம்பர், ஜனவரி – குளிர்காலம்.
பூமியின் அச்சு சுழற்சி காரணமாக 2160 வருடங்களுக்கு ஒருமுறை பருவகாலம் ஒரு மாதம் பின்னோக்கி பயணப்படும்.
கி.பி 3160 ஆண்டு வாக்கில் ஆங்கில அறிவியலின்படி கீழ் கண்டவாறு மாறிவிடும்.
ஜனவரி,பிப்ரவரி, மார்ச் – வசந்த காலம்;
ஏப்ரல், மே, ஜூன் – கோடைக்காலம்;
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் – இலையுதிர்காலம்;
அக்டோபர், நவம்பர், டிசம்பர்- குளிர்காலம்.
இது ஆங்கில ஆண்டுமுறைக்கான பருவகால வரைமுறை ஆகும்.