I PHONE இல் தமிழில் எழுதுவது எப்படி?

572

முன்பெல்லாம் அலைபேசியில் தமிழில் எழுத பிரத்தியேகமான செயலிகளை நிறுவ வேண்டி இருந்தது. இலவசமான செயலியாகவும் இலகுவாகக் கையாளக்கூடியதாகவும் இருந்த செயலி செல்லினம் ஆகும். இதை விட விலைக்கும் சில செயலிகள் கிடைக்கும். தற்போதைய நிலையில் ஐபோனின் எவ்வித செயலியையும் நிறுவாமல் தமிழில் உள்ளீடு செய்யக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

அவ்வசதியைப் பெறுவதற்கு கீழே உள்ள வழியில் செல்லவும்

SETTINGS – GENERAL – KEYBOARD – KEYBOARDS – ADD NEW KEYBOARD – TAMIL – TRANSLITERATION

மேலே உள்ள வழியில் சென்று பெற்ற விசைப்பலகையில் ammA தொட்டால் அம்மா கிடைப்பாள்.

SETTINGS – GENERAL – KEYBOARD – KEYBOARDS – ADD NEW KEYBOARD – TAMIL – STANDARD எனும் வழியில் சென்றால் இன்னொரு தமிழெழுதி கிடைக்கும்.

அ ம ் ம ஆ எனத் தொட்டால் அம்மா கிடைப்பாள். அதாவது,

க+்=க்

க+அ=க

க+கா=கா

என்றவாறு தமிழெழுதி அமையும்..

தொடக்கத்தில் தடுமாற்றம் இருந்தாலும் பழகப் பழக தடங்கலில்லாமல் வந்து விடும் தமிழ்த்தட்டச்சு

இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், தமிழ்பலகை பயன்படுத்துவதால் ஆங்கில, பிரஞ்சு, ஜெர்மன் மொழிப்பலகை பயன்படுத்த முடியாமல் போய் விடுமோ.. எல்லா இடத்திலும் தமிழில்தான் எழுத வேண்டி வருமோ என்ற ஐயமும் அச்சமும் தேவை இல்லை..

எத்தனை மொழிப்பலகையையும் நாம் நிறுவிக்கொள்ளலாம். மேலே உள்ள படத்தில் உள்ளதைப் போல உலகப் படத்தைத் தொடத் தொட விசைப்பலகை மொழி மாற்றலாம்.