வயவையூர் ஈன்ற வீரமறவன் காண்டீபனுக்கு வீரவணக்கம்!

பாரதியார் பாடல்களில் கண்ட புதுமைப் பெண்ணையும் ,

அம்பேத்கார் முன்னெடுத்த சமூகவிடுதலைக் கருத்தையும்,

பாவேந்தர் பாரதிதாசன் கண்ட புரட்சிப் பாக்களை பாடி முடிக்காமல்,

உலகின் அதியுச்ச புரட்சி வீரர்களின் கருத்துக்களை தொண்டை கிழியக் கிழிய முழங்கியே முடிக்காமல்,

மெட்டுக் கட்டியே மொக்கையாய் ஒரு
ஆடலில் முடிக்காமல்,

தேடலில் கண்டு கொண்டவர் எங்கள் தங்கத்_தலைவர்!

அந்த சோழப் புதல்வன் அண்ணன் பிரபாவின் பின் பிரவாகம் எடுத்த

அக்கினிக் குஞ்சுகளாகி,

இலட்சியத் தோழன்களாகி,
இலட்சியத் தோழிகளாகி,

தம்பிகளாகி
தங்கைகளாகி,

மகன்களாகி
மகள்களாகி,

ஓர் இலட்சிய வாழ்க்கையை வாழ்ந்து எங்கள் மக்களுக்கு
வழிகாட்டி – இன்று விழி மூடி அறிதுயில் கொள்கின்றனர்

இந்த_மானமாவீரர்கள்!🎖🎖🎖